திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

சம்பவம்னா இப்படி இருக்கணும்.. 40 நிமிடத்தில் TVK-வில் இணைய இவ்வளவு மில்லியன் மக்களா.?

Vijay-TVK: நேற்றிலிருந்தே விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சோசியல் மீடியாவில் மிகப்பெரும் பிரளயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்து வரும் விஜய் நேற்று விலை இல்லா வீடுகள் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில் கட்சியின் முக்கிய அணிக்கு மகளிரை தலைமை ஏற்க செய்து மாஸ் காட்டினார் விஜய்.

இந்த சர்ப்ரைஸ் போதாது என்று சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அதில் முதல் ஆளாக உறுப்பினர் அட்டையை பெற்ற விஜய் எப்படி இதில் இணைய வேண்டும் என்ற வழிமுறையையும் கூறியிருந்தார்.

Also read: புது மாற்றத்தை கையில் எடுக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. மகளிர் தினத்தில் பெண்களுக்கு கொடுத்த அங்கீகாரம்

அந்த அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களிலேயே மக்கள் விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். அதை அடுத்து 48 நிமிடங்களில் ஒரு மில்லியன் விண்ணப்பங்கள் வந்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இதில் மற்றொரு தரமான சம்பவம் என்னவென்றால் விஜய்யுடன் இணைய மக்கள் கரம் கோர்த்த நிலையில் கட்சியின் சர்வர் தற்போது செயலிழந்துள்ளது. விரைவில் இது சரி செய்யப்பட்டு விடும் என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது. அரசியல் கட்சியின் சர்வர் செயலிழந்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.

அந்த அளவுக்கு விஜய் கட்சியில் இணைய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் மற்ற அரசியல் கட்சிகளையும் ஆட்டம் காண வைத்திருக்கிறார் தளபதி. இரண்டு கோடி உறுப்பினர்கள் தான் இலக்கு என்ற நிலையில் முதல் நாளே மிகப்பெரும் விஷயத்தை செய்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.

Also read: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராவது எப்படி.? வீடியோ மூலம் தொடங்கி வைத்த தளபதி

Trending News