தமிழ் சினிமாவில் நடிகர் சங்கம் மற்றும் இயக்குனர் சங்கம் என எல்லோருக்குமே சங்கங்கள் இருந்து வருகின்றன. அந்தந்த காலத்திற்கு தகுந்த மாதிரி தலைவர்கள் வருவார்கள். அப்படி அவர்கள் வரும் பொழுது தொழிலாளர்களுக்கு ஏதையாவது செய்யவேண்டுமென்று செய்வார்கள் செய்து முடிப்பார்களா என்று தெரியாது.
இது மாதிரி கடந்த 2020ஆம் ஆண்டு சென்னையை அடுத்த பையனூர் தமிழக அரசு சார்பாக திரைப்பட நகரம் அமைக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித்தர அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் 500 சதுர அடி முதல் 2000 சதுர அடிகள் வரை ஒவ்வொரு வீடும் கட்டப்படும் என அறிவித்திருந்தனர்.
Also Read : ஏமாற்றுகிறதா நடிகர் சங்கம்? நாசர், கார்த்திக், விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்பு
இதில் 15 ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த இடத்தில் மொத்தம் 20 ஸ்டூடியோக்கள் கட்டமுடியும். இதில் 5 ஸ்டுடியோக்கள் மேல் கட்டி வருகின்றன என அப்போது கூறி வந்தனர். இந்த விழாவில் பங்கேற்க அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அழைக்க ஆர்.கே. செல்வமணி தலைமையில் முடிவு செய்யப்பட்டது.
இந்த அழைப்பு வந்து இரண்டு வருடத்திற்கு மேலாக ஆகிறது. இதை கட்டி கொடுத்தார்களா, தொழிலாளர்களுக்கு வீடுகள் கிடைத்ததா, இதைப் பற்றிய செய்திகள் இதுவரை இன்னும் வரவில்லை. வெறும் கண்துடைப்புக்காக இந்த காரியத்தை அப்போது உள்ள ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்தார்களா அதற்கு ஆர்.கே. செல்வமணி துணை போனார்களா என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது.
Also Read : நடிகர் சங்க வாட்ஸ்அப் குரூப்பில் வெளியான அஜால் குஜால்.. கண்டபடி திட்டிய முன்னணி நடிகர்கள்
சினிமா சம்பந்தமான இதுமாதிரி பல திட்டங்களுக்கு தலைவர்கள் அடிக்கல் நாட்டுவதற்கு சினிமாவில் உள்ள முக்கியமானவர்கள் துணை போவதும் எப்போதுமே நடந்து வருகிறது. வீடு கட்டித் தரப்பட்டால் சினிமாவின் சாதாரண நிலை தொழிலாளருக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
இது மாதிரியே தற்போது விஷால் தலைமையில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் நடிகர் சங்கம் கட்ட தொடங்கி இன்று வரை கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இது தற்போது உள்ள எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆக மொத்தம் அனைவரும் இப்படி பெயருக்காக அடிமட்ட தொழிலாளர்களை ஏமாற்றுவது வருத்தமளிக்கிறது. இந்த செய்தி தற்பொழுது வெளிவந்துகொண்டிருக்கிறது இதற்கான பதில் ஆர்.கே. செல்வமணி தலைமையில் கூறவேண்டும்.
Also Read : காதல் கல்யாணத்துக்காக பரிகாரம் செய்யும் விஷால்.. 45 வயது வரை திருமணம் தள்ளி போக இதுதான் காரணம்