புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சினிமாவை ஒரு கையில் தாங்கி பிடிப்பதே இந்த படங்கள்தான்.. மிஷ்கினை தொடர்ந்து விஜய் இயக்குனரும் காட்டம்

தமிழ் சினிமாவில் தற்போது பல படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வருடத்திற்கு கிட்டத்தட்ட பல இயக்குனரின் இயக்கத்தில் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதில் ஒரு சில படங்கள் மட்டுமே தயாரிப்பாளருக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் வசூலை வாங்கி கொடுக்கின்றனர்.

சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற ஒரு சில இயக்குனர்கள் உள்ளனர். அவர்கள் பல கோடி செலவில் படங்களை எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் வசூலைப் பொறுத்தவரை கொஞ்சம் விமர்சன ரீதியாக தகவல் தான்பேசப்பட்டு வருகிறது.

உதாரணத்திற்கு எந்திரன் 2.o போன்ற படங்களை கூறலாம். ஒருமுறை மிஸ்கின் பாகுபலி படத்தை பற்றி விமர்சனம் செய்திருந்தார். ஆயிரம் கோடி செலவில் பாகுபலி எடுக்கப்பட்டதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என நிருபர் கேட்க அதற்கு மிஸ்கின் நல்ல படம் வெறும் பத்து லட்சத்தில் கூட எடுக்கலாம் பாகுபலியும் ஒரு படம் அவ்வளவுதான் என கூறினார்.

அதற்கு அர்த்தம் ஒரு படத்தை எவ்வளவு கோடி செலவில் எடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. சிறப்பான கதையில் குறைந்த செலவில் எடுத்தாலே யாரும் நஷ்டம் அடையாமல் பல கோடி வசூல் பெறலாம் என்பதை நாசுக்காக கூறியிருந்தார்.

தற்போது மிஷ்கினை தொடர்ந்து பேரரசு தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நஷ்டம் அடையாமல் வசூல் வாங்கி கொடுப்பது சிறிய பட்ஜெட் படங்கள்தான் என கூறியுள்ளார். மேலும் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாவதால் மட்டுமேதான் சினிமா இன்று வரை பெரிய அளவில் நஷ்டம் அடையாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending News