வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விடாமுயற்சிக்கே இன்னும் வழி பிறக்கல.. ஏகே 63, 64க்கு வந்த புது அப்டேட்

Actor Ajith: அஜித் துணிவு படத்தின் வெற்றியைப் பார்த்த பிறகு அவருடைய நேரம் சரியில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் விடாமுயற்சி படத்தில் கமிட் ஆனதிலிருந்து ஒவ்வொரு பிரச்சினையாக சந்தித்து வருகிறார். இது என்னடா இவருக்கு வந்த சோதனை என்று சொல்வதற்கு தகுந்தாற் போல் இவருடைய விடாமுயற்சி படம் திராட்டில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஒண்ணா ரெண்டா ஏகப்பட்ட பிரச்சனை, ஆரம்பத்தில் இயக்குனரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் பிறகு தயாரிப்பாளர் வருமான வரியில் சிக்கிக் கொண்டது, அடுத்ததாக இவர் பைக் டூர் போனது, பின்பு இவருடைய அப்பாவின் இறப்பு இப்படி தொடர்ந்து அடி மேல் அடிபட்டு வந்திருக்கிறார்.

Also read: விடாமுயற்சிக்குப் பிறகு அஜித் இணையும் மாஸ் கூட்டணி.. மீண்டும் சென்டிமென்டில் சிக்கிய ஏகே

தற்போது எல்லா பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாலும் இன்னும் ஏன் விடாமுயற்சிக்கு விடிவு காலம் பிறக்கவில்லை என்பதுதான் தெரியவில்லை. இதனால் இவருடைய படம் இப்போதைக்கு வராது என்று ரசிகர்கள் ரொம்பவே சலிப்படைந்து விட்டார்கள்.

இந்நிலையில் இவருடைய 63 மற்றும் 64 படத்திற்கான அப்டேட் வந்துள்ளது. அதாவது 63வது படத்தை சிறுத்தை சிவா இயக்க இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம், ஆகிய படங்களை தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைய உள்ளார். அத்துடன் இப்படம் சன் பிக்சர்ஸ் ப்ரொடக்ஷன் தயாரிக்கப் போகிறது.

Also read: கமல் சூதானமாய் வேண்டாம் என தூக்கி எறிந்த 5 இயக்குனர்கள்.. அஜித் பிரண்டுக்கு இப்படி ஒரு நிலைமையா

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்தால் அது வெற்றிகரமாக முடியும் என்று அஜித்திடம் சிறுத்தை சிவா சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார். இதனால் அஜித் முழு மனதுடன் இவர்கள் காம்போவில் இணையப் போகிறார்.

அதற்கு அடுத்து ஏகே 64 படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் பண்ணயிருக்கிறார். ஆனால் விடாமுயற்சி படமே என்ன ஆச்சு என்று தெரியாத நிலையில் சும்மா ஒரு கையெழுத்து தானே போட்டு வைப்போம் அப்படிங்கற மாதிரி தொடர்ந்து இரண்டு படத்தில் கமிட்டாகி இருப்பது எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

Also read: அர்ஜுனுக்கு சினிமா கேரியரை தூக்கிவிட்ட 5 படங்கள்.. அஜித் விஜய்க்கு வில்லனாக நடித்தும் குறையாத மாஸ்

Trending News