தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இளம் இயக்குனர் என்ற பட்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் தான் கார்த்திக் சுப்புராஜ். 2002ஆம் ஆண்டு பீசா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
அதற்குப் பின்னர் ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இவர் இயக்கிய படங்களுக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது.
2021 ஆம் ஆண்டு வெளிவர காத்துக்கொண்டிருக்கும் ஜகமே தந்திரம், சியான் விக்ரமின் 60வது படம், நவரச என்ற வெப் சீரியஸ் கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 2019ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையில் கிட்டத்தட்ட 285 கோடி வசூல் படைத்தது.
இந்த படத்தின் பிளாஷ்பேக்கில் வரும் ரஜினிகாந்தின் லுக், ஜகமே தந்திரம் தனுஷின் கிடா மீசையும் ஒத்துப் போவதால் இது பேட்ட படத்தின் இரண்டாம் பாகமா.? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் அதிக அளவில் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கார்த்திக் சுப்புராஜ் சமூக வலைத்தளங்களில் பேட்ட ரஜினியின் கதையை வைத்து தான் ஜகமே தந்திரம் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்று பலரும் என்னிடம் கேட்டுள்ளனர்.
அவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் ‘இல்லை’ என்பதுதான் பேட்ட படத்திற்கும் ஜகமே தந்திரம் படத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இது வேறு கதை என தெளிவுபடுத்தியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். விரைவில் OTT தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி ஜகமே தந்திரம் வெளிவர காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.