அஜித் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் பெரிதும் காத்திருந்த நிலையில் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி ஏகே 62 விடாமுயற்சி என்ற டைட்டிலுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதத்தில் இருந்து அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஏற்கனவே வேர்ல்ட் டூர் செல்வதை அஜித் முடிவு செய்திருந்தார். இதற்கான முதல் கட்டத்தையும் தொடங்கினார். இதில் நேபால், பூட்டான் ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
Also Read : ஒரே ஹீரோயினை காதலிக்கும் அண்ணன் தம்பி கதையில் உருவான 5 படங்கள்.. தம்பியை கொல்ல துணிந்த அஜித்
இப்போது உலகம் முழுவதும் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வரைபடத்தை அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த பதிவு அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்ட வருகிறது. ஏற்கனவே அஜித்தின் வேர்ல்ட் டூரை நெட்பிளிக்ஸ் வெளியிடுவதாக தகவல் வெளியானது.

Also Read : சப்போட்டிங் கேரக்டரில் அஜித் நடித்த 5 படங்கள்.. தளபதிக்கு உயிர் நண்பராக இருந்த ஏகே
மேலும் அஜித்தின் வேர்ல்ட் டூ நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் விடாமுயற்சி சூட்டிங் விரைவில் தொடங்கி நவம்பர் குள்ளாகவே படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஆகையால் விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலையை விடாமுயற்சி படக்குழு ஈடுபட இருக்கிறது.


Also Read : விஜய் கேட்ட கேள்வியால் வேதனையில் பிரபல நடிகர்.. இப்ப வரை ஆறுதலாக இருக்கும் அஜித்