செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

திருமணத்திற்காக ஒன்று கூடிய 80ஸ் ஹீரோயின்கள்.. சுஹாசினியுடன் வைரலாகும் கமல் முதல் மனைவியின் புகைப்படம்

சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதல் நாயகனாக இருக்கும் கமல் இருமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று இருக்கிறார். அதில் அவருடைய முதல் மனைவி குறித்து அவ்வப்போது செய்திகள் வெளி வந்திருக்கிறது. அதிலும் கமல் குறித்து அவர் வெளியிட்ட பதிவுகள் அனைத்தும் சர்ச்சையாகவே இருக்கும்.

அந்த அளவுக்கு அவர் கமல் மேல் இருக்கும் கோபத்தை பல சமயம் வெளிப்படுத்தி இருக்கிறார். கமலை விட நான்கு வயது பெரியவரான வாணி கணபதி மேல்நாட்டு மருமகள் என்ற படத்தில் நடிக்கும் போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவருடைய படங்களுக்கு காஸ்டியூம் டிசைனர் ஆகவும் இருந்திருக்கிறார்.

Also read: விக்ரம், வாரிசை ஓரம் கட்டிய லியோ.. வெளிநாட்டு உரிமை எத்தனை கோடி தெரியுமா?

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதை தொடர்ந்து கமல் சரிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஆடு பகை குட்டி உறவு என்பதற்கு இணங்க கமலை பிரிந்தாலும் வாணி கணபதி சுஹாசினியுடன் ஒரு நல்ல நட்பிலேயே இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கன்னட நடிகர் அம்பரீஷின் மகன் திருமணத்தில் கமலின் முதல் மனைவியான வாணி கணபதி கலந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த திருமணத்திற்கு 80 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த அனைத்து நடிகைகளும் வந்திருந்தது கூடுதல் சிறப்பாக இருந்தது.

Also read: ஆல் டைம் பான் இந்தியா ஸ்டார் கமல் சார் தான்.. ரஜினி ரசிகர்களை சீண்டி பார்த்த நடிகர்

அந்த வரிசையில் ராதிகா, லிஸி, மேனகா, சுஹாசினி உள்ளிட்ட பல நடிகைகள் இந்த நிகழ்ச்சிக்காக ஒன்று கூடி இருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும் இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் வாணி கணபதி சுஹாசினியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் உலக நாயகனின் முதல் மனைவியை அடையாளம் கண்டு கொண்டு கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருமணத்தில் ஒன்று கூடிய 80 ஹீரோயின்களுடன் சேர்ந்து வாணி கணபதியும் இருக்கும் இந்த போட்டோ இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது.

சுஹாசினியுடன் கமல் முதல் மனைவி

suhasini-radhika-lissy
suhasini-radhika-lissy

Trending News