தமிழ் திரையுலகில் பல வருடங்களாக வெற்றிக்காகப் போராடி வரும் சில நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடும் உழைப்பைக் கொடுத்து இவர் எத்தனையோ திரைப்படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் அனைத்தும் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை. இருப்பினும் அவர் புதுப்புது கதாபாத்திரங்களை தேர்வு செய்து தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் இவர் தற்போது நடித்துள்ள யானை திரைப்படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். இந்தத் திரைப்படம் வெளி வந்தால் அதன் பிறகு அவருடைய ரேஞ்சே வேற லெவலுக்கு மாறி விடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை சினம் போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவை எனும் விமர்சனத்தை பெற்றது.
Also Read: அருண் விஜய்க்கு பதில் வில்லனாக களமிறங்கும் ஹீரோ.. சிரிப்பு மூட்டும் செட்டாகாத முகம்
இருப்பினும் அருண் விஜய் தனது கடின உழைப்பின் மீது ஆணித்தரமாக நம்புகிறார். இதனால் அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிக்கும் படத்தின் ஆக்சன் காட்சியின் போது ஏற்பட்ட காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்திருக்கிறார்.
தற்போது அருண் விஜய், ஏஎல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் துவங்கப்பட்டது.
Also Read: அடுத்தடுத்து வரும் சோதனைகள்.. பழைய விக்டராக களமிறங்கும் அருண் விஜய்
இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் தீவிரமாக சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது, அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அந்தப் புகைப்படத்தை தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதில் அருண் விஜய்க்கு கையில் அடிபட்டு ரத்தம் கண்ணி போல் உள்ளது.
மேலும் அருண் விஜய் சண்டைக் காட்சிகள் எத்தனை முறை காயப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் டூப் போடாமல் அவரே நடித்து வருகிறார். எப்போதுமே சண்டைக் காட்சியில் உண்மையாக நான் நடிப்பதையே விரும்புகிறேன் என்றும் இந்தப் புகைப்படத்துடன் தெரிவித்து இருக்கிறார். இதைப் பார்த்ததும் ரசிகர்களும் ஒரு பக்கம் அருண் விஜயை பாராட்டுவது மட்டுமல்லாமல் அவருக்கு ஏற்படும் காயங்களுக்கு பரிசாக படத்தின் வெற்றி அமையும் என்றும் கமெண்ட் செய்கின்றனர்.
காயத்துடன் அருண் விஜய் வெளியிட்ட பகீர் புகைப்படம்
![arun-vijay-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/11/arun-vijay-cinemapettai.jpg)
Also Read: ரீமேக் இயக்குனருடன் மாஸ் கூட்டணியில் அருண் விஜய்.. டைட்டிலுடன் வெளிவந்த வீடியோ!