திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

குழந்தை பெற்ற பின்பும் குறையாத ரொமான்ஸ்.. கடற்கரையில் ஆல்யாவுக்கு லிப் கிஸ் கொடுத்த சஞ்ஜீவ் போட்டோஸ்

சின்னத்திரையில் சிறந்த ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் சஞ்சீவ், ஆல்யா மானசா தம்பதிகள். சீரியலில் நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவருக்கும் இப்போது ஆண், பெண் என இரண்டு அழகான குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களின் போட்டோக்கள் அவ்வப்போது மீடியாவில் வெளியாகி வைரலாகும்.

அந்த வகையில் சஞ்சீவ் இப்போது தன் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதில் அவர் வெளியிட்டுள்ள ரொமான்டிக் வீடியோ ஒன்று இணையதளத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

Also read: டாப் 10 சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. அசுர வேகத்தில் முந்தி அடிக்கும் இனியா சீரியல்

அதாவது சஞ்சீவுக்கு ஆல்யா மேல் எந்த அளவுக்கு காதல் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பல பேட்டிகளில் அவர் அதை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். அதை தற்போது நிரூபிக்கும் வகையில் அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் ரொமான்டிக்காக கொஞ்சி கொள்வது பார்ப்பவர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது.

காதலுடன் இருக்கும் சஞ்சீவ்-ஆல்யா

sanjeev-alya
sanjeev-alya

மேலும் கடற்கரையில் இருவரும் விளையாடுவது போன்று இருக்கும் அந்த வீடியோவில் சஞ்சீவ் ஆல்யாவுக்கு லிப் கிஸ் ஒன்றும் கொடுக்கிறார். அந்த போட்டோ தான் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது. இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் கூட இந்த தம்பதிகள் இவ்வளவு காதலுடனும், சந்தோஷத்துடனும் இருப்பதை பார்க்க ரொம்பவும் க்யூட்டாக இருக்கிறது.

Also read: டிஆர்பி-யை அடித்து நொறுக்கும் டாப் 10 சீரியல்கள்.. பட்டையைக் கிளப்பும் சீரியல்களின் ரேட்டிங் லிஸ்ட்

தற்போது சஞ்சீவ் சன் டிவியில் கயல் சீரியலிலும், ஆல்யா மானசா இனியா சீரியலிலும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு சீரியலும் டிஆர்பியில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி பிசியாக இருக்கும் நேரத்திலும் இவர்கள் இருவரும் அவ்வப்போது இதுபோன்று குடும்பத்தோடு வெளியூர் செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

குழந்தை பெற்ற பின்பும் குறையாத ரொமான்ஸ்

alya-sanjeev
alya-sanjeev

அந்த வகையில் சஞ்சீவ் வெளியிட்டுள்ள இந்த வீடியோவிற்கு தற்போது ஏராளமான லைக்குகள் குவிந்து கொண்டிருக்கிறது. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் ஊர் கண்ணே உங்கமேல் பட்டுடுச்சு, சுத்தி போடுங்க என்ற கமெண்ட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Also read: பெரியப்பா குணசேகரனை மூக்கு உடைய கொடுத்த பதிலடி.. வாயடைத்து போன எதிர்நீச்சல் குடும்பம்

Trending News