இன்று விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயார் என வில்லன், கதாநாயகன், வயதான மனிதன், திருநங்கை என ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தனது 51ஆவது படப்பிடிப்பை பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதில் விஜய் சேதுபதியின் ஜோடியை பார்க்கும் போது அமுல் பேபி போல் அவ்வளவு அழகாக இருக்கிறார். 45 வயது ஆகும் விஜய் சேதுபதி டாப் நடிகைகளுடன் மட்டுமல்லாமல் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து இளசுகளை உசுப்பேற்றி விடுகிறார்.
Also Read: அகதியாக அடையாளத்துக்கு போராடும் விஜய் சேதுபதி.. யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைவிமர்சனம்
‘பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்’ என்று இந்த ஜோடியை பார்த்து நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். மேலும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’ பட இயக்குனர் ஆறுமுக குமார் இயக்குகிறார். 7 சிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார்.
சென்னையில் துவங்கப்பட்ட இந்த படத்தின் பூஜையில் ஒட்டுமொத்த பட குழுவும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது. அது மட்டுமல்ல இந்த படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஒரே செட்யூலில் எடுத்து முடிக்க வேண்டும் என பட குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் 51வது படப்பிடிப்பு பூஜை

Also Read: விஜய்க்காக இறங்கி வந்த பவானி.. ஷாக் மேல் ஷாக் கொடுத்து லோகேஷ் செய்யும் சம்பவம்
ஏற்கனவே விஜய் சேதுபதி- ஆறுமுக குமார் கூட்டணியில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’ என்ற படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் மறுபடியும் அதே இயக்குனருக்கு விஜய் சேதுபதி வாய்ப்பு கொடுத்திருப்பது ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது. இருப்பினும் இரண்டாவது முறையாக இணைந்த இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த படத்திற்கு பூஜை போட்ட விஜய் சேதுபதி
