லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் மற்றும் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஃபிலோமின் ராஜ். இவர்கள் இருவரும் ஆரம்ப காலத்தில்லிருந்தே நெருங்கிய நண்பர்கள் என கூறியுள்ளார்.
தன்னுடைய நண்பருக்கு திருமண நடந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் அவரது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து இயக்கும் விக்ரம் படத்திலும் எடிட்டராக ஃபிலோமின் ராஜ் பணியாற்ற உள்ளார் .
ஃபிலோமின் ராஜ் திருமணத்திற்கு நேரில் சென்ற லோகேஷ் கனகராஜ் வாழ்த்துக் கூறியுள்ளார். மேலும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று முதல் புதிய வாழ்க்கை தொடங்கயிருக்கும் ஃபிலோமின் ராஜ் மற்றும் திவ்யா பிரதீபா ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அவர்களது புதிய பயணம் மகிழ்ச்சியாக தொடங்கட்டும் என பதிவிட்டுள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படத்தில் எடிட்டராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது