தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் எப்போதுமே மற்ற நடிகைகளை போல கிடைக்கும் படங்களில் நடிக்காமல் ஏதாவது ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் இருந்தால் மட்டும் தான் நடிப்பார். அப்படி இவர் ஏகப்பட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.
சமீபகாலமாக இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் வராமல் தமிழ்சினிமாவில் தட்டுத்தடுமாறி வந்தார். மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததாக கூறினார் அதனால் ரசிகர்கள் பலரும் எந்த கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் படத்தில் பெரிய அளவில் இவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
அதனால் சற்று மன வருத்தத்தில் இருந்த ஆண்ட்ரியா இனிமேல் எந்த கதையாக இருந்தாலும் அதில் என்ன கதாபாத்திரங்களில் பார்த்துதான் உறுதி செய்வேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது ஆண்ட்ரியாவிடம் பலரும் உங்களுக்கும் பிசாசு படத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா என கேட்டுள்ளனர்.

அதற்கு காரணம் பிசாசு 2 பாகம் படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். மிஸ்கின் இயக்கும் படங்கள் அனைத்திலுமே ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். அதே போல் இந்த படத்தில் நீங்கள் பிசாசா கவும் நடித்துள்ளீர்ர்களா என கேள்வி கேட்டுள்ளனர் .
அதற்கு ஆண்ட்ரியா எனக்கும் பிசாசு படத்திற்கும் தொடர்பு உண்டு ஆனால் பிசாசு கதாபாத்திரத்திற்கும் எனக்கும் தொடர்பு உண்டா என்பதை படம் பார்த்தால் தான் தெரியும் என ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் ஆக கூறியுள்ளார். அதனால் தற்போது ரசிகர்கள் மிஷ்கினிடம் இந்த படத்தில் என்ன வித்தியாசமான கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கிறது என கேள்வி கேட்டு வருகின்றனர்.