வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தோளில் கை போட்ட பாவத்துக்கு வச்சு செய்த கமல்.. கடைசியில் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்ட உலகநாயகன்

Kamalhassan: கமலைப் பொறுத்தவரை கமர்சியல் படங்களை எடுக்க வேண்டும், அதன் மூலம் ஆகோ ஓஹோ என்று வெற்றி பெற்று வசூல் அளவில் லாபத்தை சம்பாதிக்கணும் என்று நினைக்கக் கூடியவர் அல்ல. தன் நடிக்கக்கூடிய படங்களாக இருக்கட்டும், எடுக்கும் படங்களாகவும் சரி காலத்துக்கும் நின்னு பேச வேண்டும் என்று ஒவ்வொரு நுணுக்கங்களையும் கற்றுத் தெரிந்து அதை வைத்து சித்தரிப்பார்.

அப்படிப்பட்ட இவர் சினிமாவைப் பற்றி கரைத்து குடித்து இருக்கிறார். அதனாலேயே எல்லோரும் இவரை வைத்து இயக்குவதற்கு பலமுறை யோசிப்பார்கள். ஆனால் நடந்த பார்ட்டியில் இயக்குனர் ஒருவருக்கு
கொஞ்சம் சரக்கு உள்ள போனதும் என்ன பண்ணுகிறோம் என்று சுயநினைவு இல்லாதபோது அனைவரது முன்னாடியும் கமல் மீது தோளில் கை போட்டு நம்ம சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொல்லி இருக்கிறார்.

இது கமலுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நேரத்தில் பெருசாக அனைவரது முன்னாடியும் ரியாக்ஷன் கொடுக்காமல் மொத்த ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டு இருந்திருக்கிறார். பிறகு சபையில் சொன்ன காரணத்திற்காக இவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். ஆனால் படம் மிகப்பெரிய தோல்வி படமாக அதிக அளவில் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது.

Also read: கமலுடன் இதுவரை நடிக்காத 3 நடிகைகள்.. விடாமல் துரத்தியதால் உலகநாயகனிடம் மாட்டிக் கொண்ட ஜானகி மாமி

அதற்கு முழுக்க முழுக்க காரணம் கமலின் கோபம் தான். இந்த அளவிற்கு அவரைக் கொண்டு போய் விட்டிருக்கிறது என்ற பேச்சுக்கள் வர ஆரம்பித்து விட்டது. அதாவது கமல் எழுதி, ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளிவந்த உத்தம வில்லன் படத்தை லிங்குசாமி தயாரித்திருக்கிறார். இப்படத்தை லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் மூலம் இணைந்து உருவாக்கி இருக்கிறார்.

அனைவரது முன்னாடியும் கமலை அவமரியாதையாக நடத்தியதால் அவர் எழுதின ஒரு கதையை லிங்குசாமி மீது தள்ளிவிட்டார். இது முழுக்க முழுக்க கமலின் கதையாக இருந்தாலும் இயக்கியது ரமேஷ் அரவிந்த். இப்படத்தின் கதையை மற்ற யாரும் தயாரிக்க விருப்பம் இல்லாத பொழுது லிங்குசாமி செய்த ஒரு காரியத்தால் கமல் வேண்டுமென்றே இப்படத்தை அவர் மீது திணித்திருக்கிறார்.

இது தெரியாமல் லிங்குசாமி கமலை நம்பி படத்தை தயாரித்தார். ஆனால் கடைசியில் இவரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டது. தோளில் கை போட்ட பாவத்துக்காக லிங்குசாமி கமலை நம்பி மொத்தமாக மோசம் போய்விட்டார். ஏனென்றால் இவர்கள் காம்போவில் வெளிவந்த உத்தம வில்லன் வணிக ரீதியாக படும் தோல்வி அடைந்திருக்கிறது.

Also read: அப்ப டிவி ரிமோட்டை போட்டு உடைப்பதெல்லாம் பொய்யா.. கமலை விளாசும் ப்ளூ சட்டை

Trending News