திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மிரட்டும் பீட்சா 3.. விஜய் சேதுபதியை ஓரம் கட்டுவாரா அஸ்வின்?

பீட்சா திரைப்படம் 2012 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்திருந்தனர். இது தமிழ் சினிமாவின் வரலாற்றில் வித்தியாசமான மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் இப்படத்தை குறைந்த செலவில் எடுக்கப்பட்டு அதிக லாபத்தை கொடுக்கும் என்ற வரைமுறையை காட்டியது. இப்படத்திற்கு பெரும்பாலான ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் “வில்லா” என்ற பெயரில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆனால் இதை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதி நடித்தது போல் இந்தப் படம் அமையவில்லை என்று கூறி வந்தார்கள். இது வசூல் ரீதியாக வெற்றியை அடையவில்லை என்றாலும் ஓரளவுக்கு வித்தியாசமாக இருந்தது.

Also read: பீட்சா பட வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு எப்படி கிடைத்தது தெரியுமா.? இதுதான் காரணமாம்.!

தற்போது பத்து ஆண்டுகள் கழித்து இப்படத்தின் மூன்றாம் பாகம் “தி மம்மி” என்ற பெயருடன் வெளிவர இருக்கிறது. சிவிக்குமார் தயாரிப்பில் மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின் காக்குமானு, பவித்ரா மாரிமுத்து,ரவீனா தாஹா,காளி வெங்கட் மற்றும் குரைஷி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான டீசர் வெளியாகி வந்த நிலையில் இதற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. இப்பொழுது இதில் வெளியாகி உள்ள “கண்ணே கண்மணியே” பாடல் தாய்மை உணர்த்தும் பாடலாக தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Also read: அதல பாதாளத்தில் தொங்கும் விஜய் சேதுபதி.. பத்து நாளில் இத்தனை படம் பிளாப்பா.?

மேலும் பீட்சா படம் எப்படி விஜய் சேதுபதிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் இந்தப் படத்தின் மூலம் அஸ்வினை சினிமா கேரியரின் உச்சத்திற்கு கொண்டு போகும் என்பது சந்தேகம் இல்லை. அந்த அளவிற்கு இந்த படத்தின் டீசரில் வரும் காட்சிகளில் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.

முந்தைய பாகமான பீட்சா படத்தைப் போல இந்தப் படமும் வித்தியாசமான உணர்வை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மூலம் அஸ்வின் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விஜய் சேதுபதியை ஓரம் கட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: வயது 20 தான்..’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் இளம்நடிகை.

Trending News