திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பீட்சா பட வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு எப்படி கிடைத்தது தெரியுமா.? இதுதான் காரணமாம்.!

தமிழ் சினிமாவில் தனது கடினமான உழைப்பால் இன்று முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பகாலத்தில் பட வாய்ப்புக்காக மிகவும் கஷ்டப்பட்ட இவர் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்தார். சிறுசிறு வேடங்களில் மட்டுமே இவர் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் இவர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் வெற்றிபெறவே இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வந்தது. இப்படத்திற்குப் பின் பீட்சா படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஹாரர் படமாக வெளியான பீட்சாவை இயக்கியதன்மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்திற்குப் பின் ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என பல படங்களை இயக்கியுள்ளார். ஜிகர்தண்டா மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

இதையடுத்து சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜுக்கு கிடைத்தது. இதன்பின் இவர் தலைவருக்காக உருவாக்கிய படம் தான் பேட்ட. இன்று பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

ஆனால், ஆரம்பகாலத்தில் இவர் படவாய்ப்புக்காக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். குறும்படங்களின் மூலமாகவே சினிமாவில் நுழைந்துள்ளார். இவர் குறும்படங்களை இயக்கிய காலத்திலே விஜய் சேதுபதி இவருக்கு நெருங்கிய நண்பர். இவரது சில குறும்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

pizza
pizza

பலநாள் நட்பின் காரணமாகவே பீட்சா படத்தில் நடித்தாராம் விஜய் சேதுபதி. அந்த நட்புதான் இவர்கள் இருவரையும் அதன்பின்னும் தொடர்ந்து பயணிக்க வைத்தது என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

Trending News