கிட்டத்தட்ட பல மாதங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, தோனி தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார்,இன்று, நாளை என அனைவரையும் எதிர் பார்க்க வைத்தார். 38 வயது நிறைவு பெற்ற தோனி தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தாலும் அவருக்கு முன் அறிமுகமாகி இன்னும் தங்களது ஓய்வு முடிவை அறிவிக்காத கிரிக்கெட் வீரர்கள் விபரம் இதோ.
1.தினேஷ் கார்த்திக்: 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். என்னதான் தோனியை விட வயது குறைவாக இருந்தாலும் இவர் தோனிக்கு முன்பு அறிமுகமாகிய வர். இவர் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
இருவரும் 2004 ஆம் ஆண்டு அறிமுகமானாலும் தோனி விளையாடியது டிசம்பர் 23-ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தான்.
2. கிறிஸ் கேல்: மேற்கிந்திய தீவின் ஏலியன் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படக்கூடியவர் கிறிஸ் கேல். 41 வயது நிரம்பிய இவர் ஜமைக்கா வை சேர்ந்தவர் இவர் 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தோனிக்கு சீனியரான இவர் இன்றளவும் தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.
3.அமித் மிர்சா: 2003ஆம் ஆண்டு அறிமுகமான அமித் மிர்சா இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இந்திய அணியில் பல போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 38 வயது நிரம்பிய அமித் மிர்சா இன்னும் தனது ஓய்வு முடிவை அறிவிக்காமல் இருக்கிறார்.
4. ஜேம்ஸ் ஆண்டர்சன்: தோனிக்கு முன்பு அறிமுகமாகி இன்றளவும் தனது ஓய்வு முடிவை அறிவிக்காமல் விளையாடி கொண்டிருப்பவர் இங்கிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன். டெஸ்ட் போட்டி என்றால் இங்கிலாந்திற்கு ஜேம்ஸ் ஆண்டர்சனின் பங்கு அளவில்லாதது. இவர் டெஸ்ட் போட்டியில் நம்பர் ஒன் பவுலர் ஆவார். இவர் டிசம்பர் 15, 2002ஆம் ஆண்டு தன்னுடைய முதல் போட்டியில் அறிமுகமானார்.
5.ஹர்பஜன் சிங்: 1998 ஏப்ரல் 17 ஆம் நாள் நியூசிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார் ஹர்பஜன் சிங். இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளரான இவர் இன்று வரை தனது ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை.