விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்த பின்.. இந்திய கிரிக்கெட் அணியை ஆளப்போகும் 4 இளம் வீரர்கள்

மகேந்திர சிங் தோனிக்கு பின் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றவர் விராட் கோலி. இவ்விரு கேப்டன்களுமே இந்திய அணிக்கு தூண் போல நின்று பல வெற்றிகளை குவித்துள்ளனர்.

கங்குலிக்கு பின் தோனி, தோனிக்கு பின் கேப்டன் கோலி, கோலிக்கு பின் ரோகித் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இனிவரும் காலங்களில் இந்திய அணியை வழிநடத்திச் செல்ல தகுதியுள்ள 4 வீரர்கள்.

ஸ்ரேயாஸ் அய்யர்: தற்போது இந்திய அணியில் நான்காவது பொசிஷனில் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் அய்யர் வருங்கால இந்திய அணியை வழிநடத்த தகுதியுள்ள வீரராக இருப்பார் என முன்னாள் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியை வழி நடத்திய அனுபவம் அவருக்கு உண்டு. ஆகையால் அடுத்த கேப்டன் தேர்விற்கு அவர் பெயரும் அடிபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Iyer-Cinemapettai.jpg
Iyer-Cinemapettai.jpg

கே எல் ராகுல்: வளர்ந்து வரும் 360 வீரர். விக்கெட் கீப்பிங், பேட்டிங், பில்டிங் என அனைத்திலும் கலக்கக்கூடிய இளம் வீரர். அடுத்த தலைமுறைக்கு கேப்டன் வாய்ப்பு இவருக்கு பிரகாசமாக இருக்கிறது.

Rahul-Cinemapettai-2.jpg
Rahul-Cinemapettai-2.jpg

ரிஷப் பந்த்: தோனிக்கு பின் விக்கெட் கீப்பிங்கில் உள்ள வெற்றிடத்தை நிரப்பியவர் ரிஷப் பந்த். வருங்கால இந்தியாவிற்கு இவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார். தற்போது அனைத்து விதமான போட்டிகளிலும் வளர்ந்து வருகிறார். பல போட்டிகளில் அனுபவங்களை பெற்றால் இவரும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க தகுதியானவரே.

Rishap-pant-Cinemapettai.jpg
Rishap-pant-Cinemapettai.jpg

சுப்மன் கில்: டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் சுப்மன் கில். ஆஸ்திரேலிய தொடரில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் இவர். இவரும் பல வருட அனுபவத்திற்குப் பின் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்று வழி நடத்தக்கூடிய தகுதிகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Gill-Cinemapettai.jpg
Gill-Cinemapettai.jpg
Advertisement Amazon Prime Banner