கிரிக்கெட் விளையாட்டில் அந்த கேப்டன் பொறுப்பில் இருக்கும்போது விளையாடி உள்ளேன், இந்த கேப்டன் பொறுப்பில் இருக்கும்போது விளையாடி உள்ளேன் என்று கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் நான் 15, 16 கேப்டன்களுக்கு கீழ் அணியில் விளையாடி உள்ளேன் என்று கூறினாளல், கண்டிப்பாக அவர் குறைந்தது, பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் கிரிக்கெட் விளையாடியவராக இருக்க வேண்டும். அப்படி விளையாடி கொண்டிருப்பவர்களின் விவரம் இதோ,
சோயிப் மாலிக்: 39 வயது ஆகியும் இன்றும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். இவர் பாகிஸ்தான் அணிக்காக 1999-ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளார். இன்று வரை பாகிஸ்தான் அணிக்காக 20 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் இவர் கிட்டத்தட்ட 15 கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளார்.
அப்துல் ரசாக்: பாகிஸ்தான் அணிக்காக 18 ஆண்டுகளுக்குமேல் விளையாடிய இவர் 18 கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளார். பாகிஸ்தான் அணியில் நல்ல ஒரு ஆல்ரவுண்டராக அப்துல் ரசாக் செயல்பட்டார்.
கிறிஸ் கெயில்: யுனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில் 40 வயது ஆகியும் இன்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடி வருகிறார். 462 இன்டர்நேஷனல் போட்டிகளில் விளையாடிய இவர் 16 கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளார். இவர் விளையாட வந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னரும் அதிரடியாக விளையாடி வருகிறார்.
சாகித் அப்ரிடி: ஒரு காலத்தில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணியை மிரட்டி வந்தவர் சாகித் அப்ரிடி. 46 வயது நிரம்பிய இவர் 1997ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். 22 ஆண்டு காலம் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய இவர் 15 கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளார்.
மார்லன் சாமுவேல்ஸ்: 19 ஆண்டு காலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தனது ஆல்ரவுண்டர் பணியைச் செய்தவர் சாமுவேல்ஸ். இவர் விளையாடிய காலத்தில் 17 கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளார்.