பொதுவாக முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுக்கும் அணி விக்கெட்டுகள் இருந்தால் கடைசியில் முடிந்த அளவு அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்துவார்கள். அப்படி கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இருப்பார்கள். சில நேரங்களில் அதிர்ஷ்டத்தின் காரணமாக அவர்கள் சதம் அடிக்கும் வாய்ப்பு நிறைவேறும். அந்தவகையில் கடைசி பந்தில் சதத்தை பூர்த்தி செய்த 4 அதிரடி ஆட்டக்காரர்கள்.
ஏபி டி வில்லியர்ஸ் (2015): தென்ஆப்பிரிக்க அணியின் 60 டிகிரி வீரர் என அனைவராலும் பாராட்டப்படுபவர் டிவில்லியர்ஸ். கான்பூரில் இந்தியாவிற்கு எதிராக விளையாடிய ஒரு போட்டியில் 73 பந்துகளை சந்தித்த டிவில்லியர்ஸ் 103 ரன்களை குவித்தார். உமேஷ் யாதவின் கடைசி பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு செஞ்சுரியை பூர்த்தி செய்துள்ளார்.
கிரேக் மேக்மில்லன் ( 2001): மேக்மில்லன் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் 6 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உதவியுடன் 75 பந்துகளில் ,104 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் ஆட்டத்தின் கடைசி பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு சதத்தை நிறைவு செய்தார்.
கெவின் பீட்டர்சன் (2005): இவர் தென் ஆப்பிரிக்க அணியின் ஆண்ட்ரி நெல் போட்ட கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி 69 பந்தில் 100 ரன்கள் கிடந்தார். இதில் 7 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும்.
முகமது யூசுப் (2000 மற்றும் 2002): இவர் இந்தியாவிற்கு எதிராக 2000ஆம் ஆண்டிலும் ஜிம்பாவே அணிக்கு எதிராக 2002ஆம் ஆண்டிலும் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி சதத்தை பூர்த்தி செய்தார். இந்த சாதனையை இரண்டு முறை நிறைவேற்றிய ஒரே வீரர் முகமது யூசுப் என்பது குறிப்பிடத்தக்கது.