சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 25 ஆயிரம் ரன்கள் என்பது ஒரு மைல் ஸ்டோன். அவ்வளவு எளிதாக அதை அடைந்து விட முடியாது. குறைந்தது 500 முதல் 600,போட்டிகள் விளையாடினால் மட்டுமே இந்தச் சாதனையை எட்டமுடியும்.
அப்படி கிரிக்கெட் விளையாட்டில் மலைபோல் ரன்களைக் குவித்து, பல சாதனைகளை உடைத்து, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து 25 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த 5 வீரர்களை இதில் காண்போம்,
ஜாக்யூஸ் காலிஸ்: தென்ஆப்பிரிக்க அணியின் நம்பிக்கை நட்சத்திரம், பிரமாதமான ஆல்ரவுண்டர். உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார் காலிஸ். 19 வருட சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மொத்தமாக இவர் 25,534 ரன்களைக் குவித்துள்ளார். அதில் 62 சதங்களும் 49 அரை சதங்களும் அடங்கும். அதுமட்டுமின்றி இவர் 500 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
மகிளா ஜெயவர்தனே: டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் இவர் விளையாடிய போட்டிகள் 652. இவர் விளையாடிய காலத்தில் இலங்கை கிரிக்கெட்டின் ஒரு தூண் என்று இவரை சொல்லலாம். இவர் மொத்தமாக 64.73 என்ற சராசரியுடன் 25,957 ரன்களை குவித்துள்ளார்.
ரிக்கி பாண்டிங்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இரண்டு முறை உலகக் கோப்பையை வென்று தந்த வெற்றிகரமான கேப்டன். இவர் மொத்தமாக விளையாடிய போட்டிகளை 560. அதில் 71 சதங்களும்,144 அரை சதங்களும் அடங்கும். மொத்தம் 27,483 ரன்களை குவித்துள்ளார்.
குமார் சங்கக்காரா: 15 வருட கிரிக்கெட் வரலாற்றில் இவர் பல சாதனைகளை புரிந்துள்ளார். இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர். 2015ஆம் ஆண்டு அனைத்து வித போட்டிகளிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 594 போட்டியில் விளையாடிய இவர் மொத்தமாக 28,016 ரன்களை குவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்: கிரிக்கெட்டின் கடவுள் என கூறப்படும் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்களை குவித்த பட்டியலில் முதலாவதாக உள்ளார். இவர்.100 சதங்களும்,164 அரை சதமும் தேவைஅடித்து அசத்தியுள்ளார்.ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 200 ரன்கள் அடித்த முதல் வீரர் இவர். மொத்தமாக டெண்டுல்கர் 34,357 ரன்களை குவித்து எட்டாத உயரத்தில் உள்ளார்.