விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இப்படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்த நாளன்று விஜய்யின் தயாரிப்பாளர்கள் பல திட்டங்களைப் போட்டு வைத்துள்ளனர். எப்போதுமே விஜய்யின் பிறந்த நாளன்று தான் அவருடைய படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும்.
அதேபோல் தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் அதே நாளில் விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது.
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67 வது படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே விஜய், லோகேஷ் கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இந்நிலையில் மீண்டும் லோகேஷ், விஜய், லலித் கூட்டணியில் தளபதி 67 படம் உருவாகயுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவல் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகயுள்ளது. எனவே விஜய் ரசிகர்கள் கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா என்று சந்தோஷ கடலில் மிதக்கின்றனர்.
ஏற்கனவே லோகேஷ், தளபதி 67 படத்தைப் பற்றி பேசுகையில் இப்படம் முழுக்க முழுக்க தன்னுடைய சாயலில் இருக்கும் என கூறியிருந்தார். மேலும் இப்படத்தை எடுத்து முடிக்க ஆறு மாதம் மட்டுமே போதும் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.