பிரதமர் மோடி நீண்ட தாடிக்கு காரணம் என்ன.? என்று பலர் எண்ணியிருந்த நிலையில் பல கருத்துக்களை பலர் தெரிவித்தனர். அவற்றில் முக்கிய காரணத்தை இரண்டு முக்கிய அரசியல் பிரபலங்கள் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
கொரோனா காரணமாக பலர் முகத்தில் தாடி வளர்ந்தது. அதே போல பிரதமர் மோடியும் தாடி வளர்த்தார். பிரதமர் இல்லத்தில் முடிதிருத்தும் பணியாளர்கள் பலர் இருப்பினும் இதற்கு காரணம் இப்போது தெரியவந்துள்ளது.
கொரோனா பலரின் வாழ்வாதாரத்தை பாதித்து , உயிர்களை பலி வாங்கி கொண்டிருந்த நேரத்தில் விளக்கு ஏற்றுங்கள், கை தட்டுங்கள் என்று புதிய அறிவிப்பை மோடி அவர்கள் வெளியிட்டிருந்தார்.
மக்களின் பாதுகாப்பிற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தாடி வளர்ப்பதில் கவனம் செலுத்தி இருப்பதாக பல சர்ச்சைகள் வெளியானது. இந்த சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் “பாஜக தலைவர் அண்ணாமலை”அவர்கள் பேசியது “நாம் தமிழர் கட்சி “தலைவர் “சீமான்” அவர்கள் கலாய்த்து உள்ளார்.
அண்ணாமலை பாஜகவில் இணைந்து முதல் பல விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளானார். தற்போது அண்ணாமலை அவர்கள் மோடியின் தாடி வளர்ப்பு பற்றி கூறியதாவது “மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தை எண்ணி மோடிக்கு ஏற்பட்ட வலியை காட்டும் விதமாக தாடியை வளர்க்கிறார் “என்று கூறுகிறார்.
இதைப் பற்றி ஒரு பேட்டியில் சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு “மக்களின் துயரத்தில் மயிரை வளர்த்து தான் பங்கு எடுத்துக் கொள்வார்களா, அவன் அவன் உயிரை காப்பாற்ற போராடுகிறான்” என்று பலமாக கலைத்து விட்டார் சீமான்.