புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மனசாட்சி இருக்கா? சாயமெல்லாம் வெளுத்து போச்சு.. அல்லு அர்ஜுன் உண்மை முகம் இதுதானா

புஷ்பா 2 படம் ஒரு பக்கம் ரிலீசாகி, 1500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. ஆனால் இந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார் அல்லு அர்ஜுன். அதற்க்கு காரணமும் அவரே தான். படம் ரிலீஸான முதல் நாள், ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் படம் பார்க்க ஆசைப்பட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.

ஆசை படுவது தவறு இல்லை, ஆனால் ரூல்ஸ் மீறுவது தவறு தானே. இவர் தியேட்டருக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியும், போலீசார் பேச்சை மீறி தியேட்டருக்கு சென்றுள்ளார். இவர் வருவதை பார்த்த ரசிகர்கள், இவரை காண ஓடி வர, பெண் ஒருவர், அவரது குழந்தையோடு சேர்த்து கீழே விழுந்துள்ளார். கூட்ட நெரிசலில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் குழந்தை, இன்னும் உயிருக்கு போராடிய நிலைமையில் மருத்துவமனையில் உள்ளது.

சூழ்நிலை அல்லு அர்ஜுக்கு எதிராக மாறியபோது, தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க முயற்சி செய்தார் அல்லு அர்ஜுன். அவர், எனக்கு போலீசார் கூட்ட நெரிசல் உள்ளது என்று கூறவில்லை என்றார்.

இதை தொடர்ந்து, இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

சாயமெல்லாம் வெளுத்து போச்சு..

இருப்பினும், ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில், இருந்தார். இப்படி இருக்க, காவல் துறையினர் இவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டி, அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில், காவல்துறையினர் வரவேண்டாம் என்று கூறியும், அவர் கேட்ட அனுமதி மறுக்கப்பட்டும், அதை மீறி அல்லு அர்ஜுன் வந்திருக்கிறார்.

போதாதுக்கு வரும் வழியில், தனது கார் ஜன்னலை திறந்து, கை காட்டி Road Show வேறு நடத்தி இருக்கிறார். இதனால் தான் கூட்டம் கூடியது. ஆகையால், அல்லு அர்ஜுன் அப்பாவி என்றெல்லாம் கூற முடியாது. மேலும் காவல் துறை தங்கள் கடமையை சரியாக செய்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.

இது மட்டுமின்றி, அந்த மாநிலத்தின் முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் வேறு வெளுத்து வாங்கியுள்ளார். மொத்தத்தில், பெரிய கேஸ் ஆக வாங்கியிருக்கிறார் அல்லு அர்ஜுன்.

Trending News