Vijayakanth: ஒரு சிலரின் மறைவை எத்தனை வருடங்கள் கழிந்தாலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது நம்பவும் முடியாது. அப்படித்தான் கேப்டன் விஜயகாந்த் நம்மை விட்டு சென்று ஒரு வருடம் ஆகிவிட்டது.
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அவருடைய மறைவை கேட்டு தமிழகமே ஸ்தம்பித்து போனது. அவரை நல்லடக்கம் செய்த பிறகு இப்போது வரை அவரின் நினைவிடத்திற்கு மக்கள் வருகை தந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இன்று அவருடைய முதலாம் நினைவு நாளை ஒட்டி விஜயகாந்த் குருபூஜை நடைபெற இருக்கிறது. அதற்கான வேலைகளை கட்சி தொண்டர்களும் குடும்பத்தினரும் செய்து வந்தனர்.
அதேபோல் கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நேற்று விஜய்யை சந்தித்து அதற்கான அழைப்பை விடுத்தார். அந்த போட்டோக்கள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது.
நினைவிடத்திற்கு படையெடுக்கும் பிரபலங்கள்
அதேபோல் இன்று காலையிலிருந்து அரசியல் பிரபலங்கள் விஜயகாந்த் நினைவிடத்திற்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அதன்படி சீமான், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் குருபூஜையை முன்னிட்டு 25,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் நடைபெற இருக்கிறது. அதேபோல் தொண்டர்கள் நினைவிடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் பேரணி நடக்க அனுமதி கேட்டிருந்தனர்.
ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி மறுத்திவிட்டனர். இருப்பினும் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க கேப்டன் நினைவு நாளுக்கு வரும் தொண்டர்கள் ரசிகர்களின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது.