தமிழ் சினிமாவில் விஜயகுமார்-மஞ்சுளா நட்சத்திர தம்பதிகளின் மூத்த மகளான வனிதா, விவாகரத்து ஆகாத பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு சமூகவலைதளங்களில் பேசும் பொருளாக மாறி விட்டார்.
பின்பு அதையெல்லாம் பொருட்படுத்தாத வனிதா, பிரபல சேனல்களில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தனது குழந்தைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதனால் அவருக்கு வெள்ளித்திரையில் ஒரு சில பட வாய்ப்புகளும் வரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது முத்தமிழ் வர்மா இயக்கத்தில் ஆர்பி சவுத்ரி தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘2K அழகானது ஒரு காதல்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வனிதா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப்படத்தில் வனிதாவிற்கு ஜோடியாக பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் நடிக்கவுள்ளாராம். ‘2K அழகானது ஒரு காதல்’ படத்திற்கான பூஜை நேற்று AVM ஸ்டுடியோவில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய வனிதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகும் காதல் சம்பந்தப்பட்ட மிக அழகான கதை தான் ‘2K அழகானது ஒரு காதல்’
இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஹரிநாடார் உடன் நடிக்கிறேன். அரசியல் பிரபலமான ஹரிநாடார் எனது தூரத்து சொந்தகாரர் என்பதே இப்பொழுதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தை பற்றிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
