Amaran: கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் அமரன் கடந்த தீபாவளி அன்று வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் என்பது அனைவருக்கும் தெரியும்.

நம் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த அவரை கௌரவப்படுத்தும் விதமாக இப்படம் அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தை பார்த்த அனைவரும் தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அமரன் குறித்து மோசமாக விமர்சித்துள்ளார். இப்படம் மன்னுரிமை போராளிகளை தீவிரவாதிகள் ஆக சித்தரித்துள்ளது. இது கலையல்ல நீதியின் கொலை.

முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கூறுகளைக் கொண்ட இப்படத்தை அரசியல் கட்சி பிரபலங்கள் பாராட்டுவது வேதனைக்குரியது. துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற கேடுகட்ட படங்கள் செய்த அதே திரிபு வாதத்தை அமரன் படமும் செய்துள்ளது.
அமரன் படத்துக்கு எதிராக கிளம்பிய கருத்து
மாவீரர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை போற்றுவோம். அதேபோல் தமிழ்நாடு எவ்வாறு மாநில உரிமைகளுக்காக போராடுகிறதோ அப்படித்தான் காஷ்மீர் மக்கள் தங்கள் மண்ணின் உரிமைக்காக போராடுகின்றனர்.
சினிமா என்ற இருளை வீசி அவர்களின் உரிமை போராட்டத்தை திரிப்பதும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறைப்பதும் அவர்களை பயங்கரவாதிகளாக மக்கள் மனதில் விதைப்பதும் நாணயமற்ற செயல் என அவர் தன் கருத்தை முன் வைத்துள்ளார்.
மேலும் இப்படத்தை மாணவர்கள் பார்க்க வேண்டும் என்று சொல்வது பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைப்பதாகும் எனவும் தெரிவித்துள்ளார். இப்படியாக அவர் கூறிய இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.