திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

234 தொகுதிகளையும் அவர்களை சந்திக்க போகும் விஜய்.. அரசியல் அஸ்திவாரம் பயங்கரமா இருக்கு

விஜய் எந்த அளவுக்கு நடிப்பின் உச்சத்தில் ஹீரோவாக இருக்கிறாரோ அதே அளவுக்கு அவருடைய பொது வாழ்க்கையிலையும் நிஜ ஹீரோவாக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அதனாலயே நடிப்பதையும் தாண்டி கூடிய விரைவில் அரசியலிலும் வர இருக்கிறார். இது சினிமாவில் காலங்காலமாக நடக்கிற விஷயமாகத்தான் இருக்கிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்து தற்போது வரை நடிகர்கள் நடித்து புகழ்பெற்று பின்பு அரசியலில் இறங்கி விடுகிறார்கள்.

அப்படித்தான் விஜய்க்கும் அரசியல் தாக்கம் ஏற்பட்டு விட்டது. இதற்கு ஒரு கருவியாக தான் விஜய் மக்கள் இயக்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் நிறைய விஷயங்களை செய்து வருகிறார். அந்த வரிசையில் இந்த வருடம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்களை எடுத்த 1500 மாணவர்களை சந்தித்து நிதி உதவி வழங்க இருக்கிறார்.

Also read: தளபதி 68ல் அந்த விஷயத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்த விஜய்.. டபுள் ஹேப்பி மூடில் வெங்கட் பிரபு

அது மட்டுமன்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களை தேர்ந்தெடுத்து, அத்துடன் பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களை நேரடியாக விஜய் சந்தித்து பொருள் உதவி மற்றும் நிதி உதவி வழங்கப் போவதாக கூறப்படுகிறது.

இதற்கான பட்டியலை தயாரிக்கப்பட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் அந்த மாணவர்களை சந்திக்கும் முயற்சியில் விஜய் வருகிற ஜூன் மாதம் ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக ஸ்ரீ வாரி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், நீலாங்கரையில் உள்ள ஆர்கே திருமண மண்டபம் என மூன்று இடங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Also read: சிங்கத்தை வேட்டையாடும் விஜய்.. லோகேஷ் வெளியிட்ட திரில்லிங் வீடியோ

மேலும் இது குறித்து வருகிற ஜூன் மாதம் அவருடைய பிறந்த நாளுக்கு முன்னதாக இந்த நல்ல விஷயங்களை செய்து முடிக்குமாறு தீர்மானித்திருக்கிறார். அதனால் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதிக்கு முன் 17 அல்லது 18ஆம் தேதி நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஏற்கனவே அரசியலில் வரவேண்டும் என்பதற்காக பல்வேறு வேலைகளை பார்த்து வரும் இவர் தற்போது மாணவர்களுக்கு நல்ல விஷயம் செய்யும் விதமாக அரசியலுக்கு அஸ்திவாரத்தை போட்டு விட்டார். எது எப்படியோ ஏதாவது ஒரு வழியில் மக்களுக்கு நல்லது செய்தால் அதுவே இவருடைய முன்னேற்றத்திற்கு படிக்கல்லாக அமையும்.

Also read: விஜய் மகன் சஞ்சய் நடிக்க வேண்டும் என அடம்பிடிக்கும் 5 பிரபலங்கள்.. நிராகரித்த முக்கிய காரணம் இது தான்

Trending News