TVK Vijay: தமிழக வெற்றி கழகம் காட்சி ஆரம்பித்து இந்த மாதம் தான் ஒரு வருடம் முடிந்து இருக்கிறது. அதற்குள் இந்த கட்சியின் வாக்கு வங்கி தமிழக அரசியல் தலைவர்களை பிரமிக்க வைத்திருக்கிறது.
நேற்று தேசிய கட்சிகளின் தேர்தல் வியூகஸ்தர் பிரசாந்த் கிஷோர் நடிகர் விஜயை நேரில் சந்தித்தார். அவருடன் தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் கூட இருந்தார்.
இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்தை இன்று பனையூரில் சந்தித்திருக்கிறார்.
தளபதியிடம் பிரசாந்த் கிசோர் கொடுத்த அறிக்கை
அத்தோடு தமிழ்நாட்டில் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கு எத்தனை சதவீத ஓட்டுகள் கிடைத்திருக்கிறது என்ற அறிக்கையையும் சமர்ப்பித்திருக்கிறார்.
இந்த அறிக்கையின்படி தமிழக வெற்றி கழகம் கட்சி ஒரே வருடத்தில் 15 முதல் 20 சதவீதம் வாக்கு வங்கிகளை தன் பக்கம் வைத்திருக்கிறது.
சமீபத்தில் லயோலா கல்லூரியின் கருத்து கணிப்பின்படி தமிழக வெற்றி கழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது.
விஜய் படித்த கல்லூரி என்பதால் இந்த கருத்து கணிப்பு அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பேசப்பட்டது.
தற்போது பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு தமிழகத்தில் அரசியல் தலைவராக அங்கீகாரம் கிடைத்திருப்பதை அறிக்கை மூலம் நிரூபித்து விட்டார்