செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

குமுறி அழுத போண்டாமணி.. மலைபோல் நம்பிய வடிவேலு செய்த பெரிய துரோகம் .

அண்மைகாலமாக நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவரது மருத்துவ செலவிற்காக தமிழக அரசும், தமிழ் சினிமா பிரபலங்களும் இவரது நிலை அறிந்து பலரும் உதவி செய்தனர்.

இதனிடையே தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள போண்டாமணி,தான் முன்பை விட தற்போது நலமாக உள்ளதாகவும்,தனக்கு உதவி செய்தஅனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக பேசினார். மேலும் பேசிய அவர், நகைச்சுவை நடிகர் வடிவேலு மீதுள்ள தனது வருத்தத்தையும் சேர்த்து தெரிவித்துள்ளார்.

Also read: பல கோடி பணத்தை வாரி தின்னு ஏப்பம் விட்ட வடிவேலு.. மோசமாய் இம்சை கொடுக்கும் புலிகேசி

நடிகர் வடிவேல் பொதுவாக ஒரு படத்தில் கமிட்டாகி நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக அவருடன் சேர்ந்து துணை நகைச்சுவை நடிகர்களும் நடிப்பார்கள். இதில் முக்கியமாக போண்டாமணி,வடிவேலுவின் காம்போவில் பல நகைச்சுவை காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்கவைக்கும்.

இதில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான மருதமலை திரைப்படத்தில் பிச்சைக்காரனாக போண்டாமணி நடித்திருப்பார். அவரின் பணத்தை ஆட்டைய போடும் போலீஸ்காரனாக வடிவேலு நடித்த காமெடி இன்றளவும் பலருக்கும் பிடித்ததாகும்.

Also read: வடிவேலுவை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்த இயக்குனர்.. இன்று வரை பேசப்படும் கேரக்டர்

இதனிடையே நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, தமிழக அரசு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட பலரும் அவரது மருத்துவ செலவிற்காக உதவி செய்துள்ளனர். ஆனால் நடிகர் வடிவேலுவிடமிருந்து எந்த ஒரு உதவியும் தனக்கு கிடைக்கவில்லை என்பதால் போண்டாமணி தனக்கு வருத்தமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில் போண்டாமணிக்கு நீங்கள் உதவி செய்வீர்களா என வடிவேலுவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,நான் உதவாமல் வேறு யார் அவருக்கு உதவுவார், கண்டிப்பாக அவருக்கு நான் உதவி செய்வேன் என சவாலாக பேசினார். இருந்தாலும் தற்போது வரை வடிவேலு,போண்டாமணிக்கு உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் கே எஸ் ரவிக்குமார்.. நியாயமே இல்லாமல் வடிவேலு கொடுக்கும் அலப்பறை

Trending News