திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

20 முறை தற்கொலைக்கு தூண்டிய சம்பவம்.‌. முரட்டு வில்லன் பொன்னம்பலத்திற்கு இப்படி ஒரு சோதனையா!

சினிமா பிரபலங்கள் கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்புகள் இல்லாததால் மருத்துவச் செலவு கூட பண்ண முடியாமல் தவித்து வருகின்றனர். பல முன்னணி நடிகர்களுடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பொன்னம்பலம்.

அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், வால்டர் வெற்றிவேல், நாட்டாமை, அமர்க்களம், முத்து போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் வரவேற்பு தான்.

பொன்னம்பலம் கிட்னி பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனாவின் முதல் அலை வந்த போது மருத்துவச் செலவிற்கு பணம் கூட இல்லாத சூழ்நிலையில், ஒரே போன் காலில் சரத்குமார் உதவியதாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

உடல்நிலை சரியில்லை, மருத்துவத்திற்கு பணமும் இல்லை அப்படிப்பட்ட சூழ்நிலையில் கிட்டத்தட்ட 20 முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களிடம் உதவி செய்யுமாறு வேண்டுகோள் வைத்தார். இவ்வளவு படங்கள் நடித்தும் எனக்கென்று எந்த ஒரு சொத்துகளையும் சேர்த்து வைக்காதது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்து கொண்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.

ponnambalam-hospitalized
ponnambalam-hospitalized

ஸ்டண்ட் யூனியன் அவரே ஒரு நாயை கூட மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வளவு வேதனையிலிருந்தும் ரசிகர்களின் வேண்டுதலால் தான் அவரை உயிர் பிழைக்க வைத்தது, அதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

தற்போது இரண்டாம் அலையில் பாதித்து வரும் நடிகர், நடிகைகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.

Trending News