வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கம்பீரமாக இருந்த கபாலியை காலி செய்த படம்.. சிறு ஆசையால் அனைத்தையும் இழந்த பொன்னம்பலம்

தமிழ் சினிமாவில் வில்லன் என்று கூறினாலே நினைவுக்கு வருவதில் ஒருவர் நடிகர் பொன்னம்பலம் தான். 80 மற்றும் 90 கால கட்டங்களில் முரட்டுத்தனமான வில்லனாக நடித்து பலரை பயமுறுத்தி உள்ளார் பொன்னம்பலம். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு இவர் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொன்னம்பலம் கடந்த 1963ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.

சிறு வயது முதலே ஜிம்னாஸ்டிக்ஸ், லாங் ஜம்ப் மற்றும் ஹை ஜம்ப் ஆகியவற்றில் கை தேர்ந்த பொன்னம்பலம் 1984ஆம் ஆண்டு தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பின்னர் கடந்த 1988ஆம் ஆண்டு வெளியான கலியுகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார். தொடர்ந்து 1993ஆம் ஆண்டு வெளியான வால்டர் வெற்றிவேல் படத்தில் நடித்து அசத்தினார்.

இப்படத்தில் இவர் நடித்த கபாலி கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அதன் பின்னர் தமிழ் திரையுலகில் முக்கிய வில்லனாக உருவெடுத்த பொன்னம்பலம் பல படங்களில் முக்கிய வில்லனாக நடித்து அசத்தி வந்தார். ஒரு கட்டத்தில் தொடர்ந்து வில்லனாக நடித்து போர் அடித்ததாலோ என்னவோ திடீரென தனது ரூட்டை மாற்றி தற்போது காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் பொன்னம்பலத்திற்கும் படம் இயக்கி நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதன் விளைவாக கடந்த 2007ஆம் ஆண்டு பட்டைய கிளப்பு என்னும் படத்தை இயக்கி அவரே தயாரித்ததோடு நடிக்கவும் செய்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் பயங்கர நஷ்டம் ஏற்பட்டது.

பின்னர் விழுப்புரத்தில் மைக்கேல் என்பவரிடம் ஓர் காரை வாடகைக்கு எடுத்து இரண்டு மாதம் மட்டும் வாடகை கொடுத்துவிட்டு பின்னர் கொடுக்காமல் இருந்துள்ளார். இதுதவிர பொன்னம்பலம் மீது ஏகப்பட்ட புகார்கள் அடுத்தடுத்து எழ தொடங்கியது. என்ன செய்வதென தெரியாமல் முழித்த பொன்னம்பலம் அதுவரை பிஜேபி கட்சியில் இருந்தவர் கடந்த 2011ஆம் ஆண்டு திடீரென அதிமுகவில் இணைந்தார்.

ponnambalam
ponnambalam

அந்த சமயத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தில் ஆட்சி புரிந்து வந்தது. எனவே அரசு வக்கீல் ஒருவர் மூலம் தன் மீது இருந்த அனைத்து வழக்குகளையும் நடிகர் பொன்னம்பலம் தள்ளுபடி செய்ய வைத்தார். ஒரே ஒரு படத்தை எடுத்துவிட்டு படாத பாடு பட்டு விட்டார் பொன்னம்பலம்.

Trending News