சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பொன்னியின் செல்வன், விக்ரமுக்கு செக் வைக்கும் ரஜினி.. அதிகாரப்பூர்வமாக 2 குட் நியூஸ் வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமா பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொன்னியின் செல்வன், விக்ரம் போன்ற திரைப்படங்கள் பல திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்து மாஸ் காட்டி வருகிறது. இந்த சாதனையை ஓவர் டேக் செய்ய வேண்டும் என்று தற்போதைய டாப் நடிகர்கள் பிளான் செய்து வருகின்றனர்.

அதில் அதிக தீவிரம் காட்டி வந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கம்பேக் கொடுத்த அவருடைய நண்பன் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து மனிதனமும் தற்போது வசூலில் சாதனை புரிந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்த சூப்பர் ஸ்டார் தான் அடுத்ததாக நடிக்கும் படம் அதை விட மாஸாக இருக்க வேண்டும் என்று பல கதைகளை கேட்டு வந்தார்.

Also read:ஹீரோ ஆதிக்கத்தை உடைத்த முதல் தமிழ் படம்.. கமல் நடித்து150 நாட்கள் ஓடி சாதனை

இதற்காகவே காத்திருந்த பல இளம் இயக்குனர்களும் சூப்பர் ஸ்டாரை சந்தித்து கதைகளை கூறி வந்தனர். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் அடுத்ததாக இரண்டு கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கிறார்.

ஏற்கனவே ரஜினி, லைக்கா நிறுவனத்திற்கு இரண்டு கதைகளை ஓகே செய்து வைத்திருக்கிறார் என்ற செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அது உறுதியாகி இருக்கிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து அடுத்ததாக இரண்டு படங்களில் இணைய இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.

Also read:காந்தாரா ஹீரோக்கு போன் போட்ட ரஜினி.. வாய்ப்பை வைத்து பக்காவாக ஸ்கெட்ச் போட்ட இயக்குனர்

மேலும் இந்த படங்களுக்காக லைக்கா நிறுவனம் சூப்பர் ஸ்டாருக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தை வாரி கொடுத்துள்ளதாம். அதன்படி இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து ரஜினி கிட்டத்தட்ட 300 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டிருக்கிறார். அதில் ஜிஎஸ்டியும் அடக்கம். லைக்கா நிறுவனமும் அதற்கு சம்மதித்து தற்போது ஒப்பந்தமும் போடப்பட்டிருக்கிறது.

இந்த விஷயம் தான் தற்போது கோலிவுட்டில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் இந்த படங்களின் மூலம் பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் திரைப்படங்களுக்கும் ஒரு செக் வைத்துள்ளார். ஆக மொத்தம் சூப்பர் ஸ்டார் தற்போது முந்தைய படங்களின் சாதனையை முறியடித்து 500 கோடிக்கும் மேல் வசூலை பார்க்க தயாராகி இருக்கிறார்.

Also read:ஐஸ்வர்யா ராயும் இல்ல, நயன்தாராவும் இல்ல.. அஜித்க்கு 5ம் முறையாக ஜோடியாகும் இளவரசி

Trending News