வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

புலிகளின் வேட்டைக்கு தயாரான சூழ்ச்சிக்காரர்கள்.. பரபரப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 28 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் தரமான சாதனையை நிகழ்த்தி வருகிறது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் இப்போது வரை 150 கோடிகளை வசூலித்துள்ளது.

இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் ஏறுமுகமாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இப்போது கோடைகால விடுமுறை தொடங்கி இருப்பதால் படத்திற்கான கூட்டமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அனைத்து தியேட்டர்களிலும் இப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Also read: கல்கியின் நாவலுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. பொன்னியின் செல்வன் 2-ல் மணிரத்னம் செய்த பல குளறுபடிகள்

இதனால் பட குழுவினர் உட்பட அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் ஏகபோக குஷியில் இருக்கிறது. அதன் காரணமாகவே ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு அறிவிப்பையும் லைக்கா வெளியிட்டு இருக்கிறது.

அதில் சோழர்களின் கொண்டாட்டத்திற்கு எல்லையே இல்லை. மீண்டும் ஒருமுறை உங்கள் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். அதனால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு புது ட்ரெய்லரை நாங்கள் வெளியிட இருக்கிறோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது நிச்சயம் எதிர்பாராத ஒன்றுதான்.

Also read: பொன்னியின் செல்வனில் சிறுவயது ஆதித்ய கரிகாலன் வைரல் புகைப்படம்.. தேடி தேடி கண்டுபிடித்த மணிரத்னம்

அந்த வகையில் ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த ட்ரெய்லர் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் படத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் காட்சிகள் அடங்கியிருக்கிறது. அதிலும் சோழ சாம்ராஜ்யத்தை அழிக்க நடக்கும் சதி உள்ளிட்டவையும் காட்டப்பட்டிருக்கிறது.

அந்த வரிசையில் பொன்னியின் செல்வனுக்கு எதிராக நடக்கும் சதி, ஆதித்த கரிகாலனை கொல்லத் துடிக்கும் பாண்டியர்கள் என எதிர்பார்ப்பை கூட்டும் காட்சிகளை ட்ரெய்லராக லைக்கா வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பொன்னியின் செல்வன் 2 வை பார்க்காத ரசிகர்களுக்கு படத்தை பார்க்கும் ஆவலையும் தூண்டி இருக்கிறது. இந்த வியாபார தந்திரம் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Trending News