தென்னிந்திய சினிமாவிலேயே சர்ச்சைகளிலும், கிசுகிசுக்களும் பத்திரிக்கைகளில் அதிகமாக எழுதப்படாத நடிகை என்றால் அது நடிகை தமன்னா தான். வெள்ளை நிற பால் கூட இவரின் நிறத்தின் முன்பாக தோற்கும் அளவிற்கு மில்க் பியூட்டி என்ற பெயருடன் தென்னிந்திய சினிமாவை கட்டிப்போட்ட தமன்னா ஒரு நடிகரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட கதையை தான் தற்போது பார்க்க போகிறோம்.
நடிகை தமன்னா தமிழ் மொழியைத் தாண்டி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என 30 வயதை கடந்தும் தற்போது வரை எப்போதுமே மார்க்கெட் உள்ள நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதன் காரணமாக தமன்னா மீது பல நடிகர்கள் வழிந்த கதையெல்லாம் உண்டு. சில நடிகர்கள் இவர் மேல் காதல் வசப்பட்டு தமன்னா பின்னாடியே சுற்றியவர்களும் உள்ளனர்.
Also Read : கல்யாணம், குழந்தைக்கு ஆசை படும் தமன்னா.. பெற்றோரிடம் கூட பேசவே முடியாத நிலையில் மில்க்பூயூட்டி
அப்படி தமிழ் சினிமாவில் தமன்னாவின் பின்னால் சுற்றிய நடிகர் என்றால் அது நடிகர் கார்த்தி தான். தனது முதல் படமான பருத்திவீரன் திரைப்படத்தில் ஆக்ஷன் நாயகனாக நடித்த கார்த்தி, பின்னர் காதல் கதை உள்ள திரைப்படங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். 2010 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா திரைப்படத்தில் நடித்த கார்த்தி, தமன்னாவுடன் ஜோடி சேர்ந்தார்.
இத்திரைப்படம் ஹிட்டான நிலையில் தமன்னாவை கார்த்தி ஒரு தலையாக காதலித்து வருவதாக பத்திரிக்கைகளில் கிசுகிசுக்கள் வந்தன. இதை மெய்ப்பிக்கும் வகையில் நடிகர் கார்த்தி தனது அடுத்த படமான சிறுத்தை படத்தில் தமன்னா நடித்தால் தான் நான் நடிப்பேன் என அடம்பிடித்து அத்திரைப்படத்தில் நடித்தாராம். அந்த அளவிற்கு தமன்னா மீது காதல் வயப்பட்டு கொண்டிருந்தார் கார்த்தி.
Also Read : பிரம்மாண்டத்திற்கு ஆசைப்பட்ட கார்த்திக்.. மிஞ்சியது என்னமோ அவமானம் மட்டும் தான்
அந்த சமயத்தில் கார்த்தியின் காதலை அறிந்த அவரது தந்தையும், நடிகருமான சிவக்குமார் கார்த்தியை தனியாக அழைத்து நீயாவது நாங்கள் சொல்வதைக் கேட்டு நடந்துக்கொள். உனது அண்ணன் சூர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டது போல் நீயும் செய்துவிடாதே , எங்களின் மனம் நோகாத படி நடந்துக்கொள் என சிவகுமார் புலம்பினாராம்.
உடனே தந்தையின் வருத்தத்தை அறிந்த கார்த்தி தனது காதலை தியாகம் செய்து ரஞ்சினி என்ற மருத்துவரை பெற்றோரின் சம்மதத்துடன் ஜூலை 3ஆம் தேதி 2011 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு ஐந்து வருடங்கள் கழித்து 2016 ஆம் ஆண்டு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் வெளியான தோழா திரைப்படத்தில் கார்த்தி தமன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன்பின் தமன்னாவுக்கும் தமிழில் வாய்ப்புகள் குறையவே அவர் தெலுங்கு, ஹிந்தி என தற்போது அங்கு சென்று நடித்து வருகிறார்
Also Read : தொடர் வெற்றியால் இயக்குனரை டீலில் விட்ட கார்த்தி.. ஒரு வருடமாக காத்திருந்த பரிதாபம்