திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடித்து நொறுக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் அட்வான்ஸ் புக்கிங்.. வசூல் மட்டும் இத்தனை கோடியா

மணிரத்னத்தின் கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கி, அதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகி, 500 கோடிக்கு மேல் உலக அளவில் வசூலை வாரிக் குவித்தது. ஏனென்றால் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பியதால் பொன்னியின் செல்வன் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இதனால் இதன் இரண்டாம் பாகமும் எப்போது வரும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆகையால் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு, ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவில் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: கமலுக்கு ஜோடியாக திரிஷா இல்லனா நயன்தாரா.. ராசி இல்லாத நடிகை என ரிஜெக்ட் செய்த ரெட் ஜெயண்ட்

இந்த முறை 500 கோடி எல்லாம் பத்தாது என்று படக்குழுவினர் தாறுமாறாக ப்ரமோஷன் வேலைகளை கடந்த சில நாட்களாக முக்கிய நகரங்களில் நடத்தி வருகின்றனர். அதற்கு பலனாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் இரண்டு நாள் புக்கிங் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் முதல் வாரத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 6 கோடி வரை கலெக்ஷன் ஆகி இருக்கிறது.

சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது. அதேபோல் உலகில் மற்ற பகுதிகளிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் வேகம் எடுக்கிறது. இந்த முறை பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமே உலகம் முழுவதும் நேரடியாக திரையிடுவதால் அதன் மூலமும் லாபம் பார்க்க முடிவெடுத்துள்ளனர்.

Also Read: மாஸ் ஹீரோக்களில் அதிகம் தோல்வி கொடுத்த நடிகர்.. கட்டம் சரியில்லாத கைப்பிள்ளைக்கு மணிரத்தினம் கொடுத்த ஆதரவு

ஏற்கனவே தரமான புரமோஷன்களை செய்துள்ள லைக்கா, அதற்கு பலனாக முதல் இரண்டு நாள் அட்வான்ஸ் புக்கிங் நினைத்ததை விட பல கோடியை தட்டி தூக்கி உள்ளது .அதிலும் உலகம் முழுவதும் அட்வான்ஸ் புக்கிங் மூலம் 11 கோடி வரை வசூலித்துள்ளது. இதன் மூலம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான மொத்த அட்வான்ஸ் புக்கிங் மட்டும் 17 கோடி வசூல் ஆகியுள்ளது.

மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஒரு சில சஸ்பென்சுகளை வைத்திருந்தார். அவற்றையெல்லாம் இரண்டாம் பாகத்தில் தான் உடைத்தெறிவதால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. இதனால் இரண்டாம் பாகத்தில் 1000 கோடியை தட்டி தூக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் கார்த்திக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா!. குந்தவையை விட கம்மியா இருக்குதே

Trending News