திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாகுபலியை தூக்கி சாப்பிட்ட பொன்னியின் செல்வன்.. திரையுலக கிங் என நிரூபித்த மணிரத்னம்

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி இப்படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி ஏகபோக வரவேற்பு பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இதுபோன்ற ஒரு வரலாற்று நாவலை படமாக எடுத்து பெருமை சேர்த்துள்ளார் மணிரத்தினம். இந்நிலையில் இதுவரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை பாகுபலி பெற்றிருந்தது. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி வசூல் செய்திருந்தது.

Also Read :இந்த ஆண்டு வசூல் வேட்டை ஆடிய டாப் 5 படங்கள்.. விக்ரம் படத்தை விரட்டிப் பிடிக்கும் பொன்னியின் செல்வன்

ஆனால் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி 8 நாட்களிலேயே 150 கோடி வசூல் செய்து விட்டது. இதனால் மிக விரைவிலேயே பாகுபலி படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் படம் பின்னுக்கு தள்ள உள்ளது. ஏனென்றால் ஒரு வாரம் கடந்த நிலையில் பொன்னின் செல்வன் படம் 325 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் இந்த வார இறுதிக்குள் எப்படியும் 350 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினியின் கபாலி, எந்திரன் போன்ற படங்களின் வசூலை முறியடித்த நிலையில் தற்போது 2.0, விக்ரம் படங்களை பொன்னியின் செல்வன் படம் பின்னுக்கு தள்ளி உள்ளது.

Also Read :உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளிவர உள்ள 8 படங்கள்.. பிரம்மாண்டத்தை எதிர்நோக்கி பொன்னியின் செல்வன் 2ம் பாகம்

இதனால் பொன்னியின் செல்வன் படம் மிக வேகமாகவே வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தை பிடிக்கும் என பேசப்படுகிறது. இதுவரை பாகுபலி படத்தை கொண்டாடி வந்த ரசிகர்கள் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை பெருமை பேசி வருகிறார்கள்.

இதனால் திரையுலக ராஜாவாக மணிரத்தினம் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது வரை பொன்னியின் செல்வன் படம் திரையரங்குகளில் நல்ல வசூல் செய்து வருகிறது. மேலும் இப்படியே போற போக்கில் பாகுபலி, பீஸ்ட், வலிமை சாதனைகளை பொன்னியின் செல்வன் படம் மிகக் குறுகிய நாட்களிலேயே முறியடிக்க உள்ளது.

Also Read :வேகமாக பாக்ஸ் ஆபிஸில் 200 கோடியை தொட்ட 3 படங்கள்.. ரஜினிக்கே டஃப் கொடுத்த பொன்னியின் செல்வன்

Trending News