வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னியின் செல்வன் படத்துக்கு வந்த ஆபத்து.. ஏற்கனவே விஜய், அஜித் படத்தில் நடந்த அராஜகம்

பொதுவாக படத்தை தயாரிப்பவர்களிடமிருந்து வினியோகஸ்தர்கள் வாங்கி தியேட்டர்களில் ரிலீஸ் செய்வார்கள். அப்படி ஒரு புது வினியோகஸ்தர் படத்தை கஷ்டப்பட்டு வாங்கி அதை திரையரங்கி ரிலீஸ் செய்வதை பொறுத்துக் கொள்ளாத பழைய வினியோகஸ்தர் பொறாமையில் ரிலீஸ் செய்யவிடாமல் பிரச்சனை செய்கிறார்கள்.

இது இங்கு இல்லை கனடாவில் தான், இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்கிறது. கனடா நாட்டில் 1 கோடியே 75 லட்சம் கொடுத்து ஒரு புது வினியோகஸ்தர் படத்தை ரிலீஸ் செய்ய பார்க்கிறார். இதனை பழைய வினியோகஸ்தர்கள் பிரச்சனை செய்கிறார்கள்.

Also Read: பொன்னியின் செல்வன் கதையில் அரளவிட்ட 5 பெண் கேரக்டர்கள்.. இரு வேடங்களில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்

ஏற்கனவே இது போன்று பல பிரச்சினைகள் நடந்துள்ளது. தளபதி விஜயின் நடிப்பில் வெளியான புலி, தெறி படங்களிலும் சீயான் விக்ரமின் மகான் போன்ற படங்களின் ஸ்க்ரீனை தியேட்டர்களில் கிழித்து ரகளை செய்திருக்கின்றனர்.

இதனால் பொன்னியின் செல்வன் படத்திற்கும் இதே ஆபத்து வந்திருக்கிறது. ஏற்கனவே நடந்த பிரச்சனைகளை வைத்து முன்கூட்டியே சுதாரித்துக் கொண்டு தகுந்த ஏற்பாடுகளுடன் புதிய விநியோகஸ்தர் படத்தை திரையிடுவதற்கு பல வேலைகளை பின்புலத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்காதவரா? மணிரத்தினத்தின் படம் பார்ப்பதற்கு முன் இத தெரிஞ்சுட்டு போங்க

இருப்பினும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகும் போதுதான் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு என்ன நிலை ஏற்படப் போகிறது என்பது தெரியும். இருப்பினும் தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து கொண்டிருக்கிறது.

ஆகவே உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்று நினைக்கின்றனர். அதிலும் கனடாவில் மட்டும் பொன்னியின் செல்வன் படத்தில் இப்படி ஒரு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

Also Read: ஓடிடியில் படங்கள் பார்ப்பதையே நிறுத்திட்டேன்.. ஏஆர் ரகுமான் சொல்லும் காரணம்

Trending News