வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஒரு வருடத்திற்கு பிறகு வெளிவந்த பொன்னியின் செல்வன் பட அப்டேட்.. கோமாவில் இருந்து வெளிவந்த படக்குழு

மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். கடந்த ஒரு வருட காலமாக மொத்த படப்பிடிப்பும் தடைபட்டது.

இந்நிலையில் மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஹைதராபாத்தில் ஒரு பெரிய செட் போட்டு பொன்னியின் செல்வன் பட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஹைதராபாத்தில் எடுக்கப்படும் இந்த காட்சிகளில் முக்கிய நடிகர்களான ஐஸ்வர்யா ராய், கார்த்திக், ஜெயம் ரவி போன்றோர் நடிக்க உள்ளார்களாம். இதற்காக மணிரத்தினம் இவர்களை கொரானா டெஸ்ட் என்ற பெயரில் சீரழித்து வருகிறாராம்.

இது ஒருபுறமிருக்க கடந்த ஒரு வருட காலமாக தலைமுடி அடர்த்தியாக வளர்த்து கொண்டு வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாமல் மற்ற நடிகர்கள் தடுமாறி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

ponniyin-selvan-preparation-photo
ponniyin-selvan-preparation-photo

இந்நிலையில் எவ்வளவு வேகமாக பொன்னியின் செல்வன் படத்தை முடித்துக் கொடுக்க முடியுமோ, அவ்வளவு வேகத்தில் முடிக்க நடிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இடையில் கொரானா ஒரு காட்டு காட்டாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என தினமும் சாமியை வேண்டிக் கொள்கிறார்களாம்.

முதலில் தாய்லாந்தில் படமாக்கலாம் என முடிவு செய்திருந்த படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் சூழ்நிலை சரியில்லாமல் போனதால் தற்போது இலங்கை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் முக்கியமான காட்சிகளை எடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.

இந்த ஒரு வருட காலத்தில் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராததால் படம் கைவிடப்பட்டது போன்ற செய்திகள் கூட வெளியானது.

Trending News