திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

4 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. பொன்னியின் செல்வன் ஹாட்ரிக் வெற்றி

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா, ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடம் பேராதரவை பெற்ற நிலையில் சமீபத்தில் இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி அனைவரையும் கவனத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகமெங்கும் உள்ள பல திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின்பு ஜம்மு-காஷ்மீரில் திறக்கப்பட்ட திரையரங்கில் முதல் திரைப்படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.இது தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.

Also read: கைதி 2 ரகசியத்தை போட்டு உடைத்த கார்த்தி.. உச்சகட்ட கடுப்பில் லோகேஷ்

இதனிடையே தற்போது துபாய் உள்ளிட்ட உலகமெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் இத்திரைப்படம் ரிலீசான நிலையில்,வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. பேன் இந்தியா படமாக ரிலீசான இத்திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 107 கோடி ரூபாய் வரை வெளிநாடுகளில் மட்டும் பொன்னியின் செல்வன் வசூல் சாதனை படைத்துள்ளது.

அடுத்தபடியாக நம் இந்தியாவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கில் இத்திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 140 கோடி வரை இந்தியா முழுவதும் நான்கு நாட்களில் வசூலை படைத்துள்ளது.

Also read: தூரமா நின்னு ரசித்துப் பார்த்த கார்த்தி.. விஜய் ஆல் டைம் ஃபேவரிட் இந்த படம்தான்

இதனிடையே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நான்கு நாட்கள் வசூல் மட்டுமே, 247 கோடியை தொட்டுள்ளது.பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கிட்டத்தட்ட 500 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கி பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட நிலையில்,நான்கு நாட்களிலேயே படத்தின் பட்ஜெட்டில் பாதியை பொன்னியின் செல்வன் எட்டியுள்ளது, புது சாதனையாக பார்க்கப்படுகிறது.

அண்மையில் வெளியான விக்ரம்,கே ஜி எப் உள்ளிட்ட பேன் இந்தியா திரைப்படங்களின் சாதனையை முறியடிக்கும் விதமாக பொன்னியின் செல்வன் ரிலீசாகி 4  நாட்களிலேயே 240 கோடியை தொட்டுள்ளது. இன்னும் 10 நாட்கள் இத்திரைப்படம் திரையரங்கில் ஓடினாள் 1000 கோடி வசூலை அடையும் என கோலிவுட் வட்டாரத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

Also read: பொறாமையில் பொங்கிய விக்ரம், கார்த்தி.. ஜெயம்ரவிக்கு வாரிக் கொடுத்த மணிரத்தினம்

Trending News