புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரிலீசுக்கு முன்னரே கோடிகளை வாரிக் குவிக்கும் பொன்னியின் செல்வன்.. அக்கட தேசத்தை பதம்பார்க்கும் மணிரத்தினம்

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் தற்போது உருவாகியுள்ளது. இதில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஜெயராம், விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல பிரபலங்கள் அந்த கதாபாத்திரங்களாகவே படத்தில் காட்சி அளிக்கின்றனர்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தற்போது டிரைலரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வியந்துள்ளனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ உரிமை எவ்வளவுக்கு விற்கப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை எந்த படமும் இவ்வளவு தொகைக்கு ஆடியோ ரைட்ஸ் போனதில்லை என சொல்லப்படுகிறது. அதாவது பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்திற்கு ஆடியோ ரைட்ஸ் 19 கோடி சென்றது.

தற்போது சல்மான்கான் நடித்து வரும் ஒரு புதிய படத்திற்கு 21 கோடி ஆடியோ ரைட்ஸ் வாங்கியுள்ளனர். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ உரிமை 24 கோடிக்கு டிப்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனால் தற்போதே பொன்னியின் செல்வன் படம் பாக்ஸ் ஆபிசில் ஒரு பெரிய சாதனை படைக்க தயாராகிவிட்டது.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ உரிமையின் மூலம் ரிலீசுக்கு முன்பே இப்படத்தின் லாபம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் ஒரு பான் இந்திய படமாக வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை காட்சியாக பார்க்க இந்த நாவலின் வாசகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். கண்டிப்பாக அவர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை காட்சியமைத்து இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News