திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மிரளவைத்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல்.. 21 வருடத்திற்குப் பின் மணிரத்னம் செய்த சாதனை!

இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்கும் வைத்திருக்கிறது நேற்று ரிலீசான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல். ஏனென்றால் கல்கியின் நாவலை படமாக்கும் திரை கனவுடன் இருந்த, மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளார்.

அந்தப் படத்தின் முதல் பாகம் நேற்று ரிலீஸ் ஆகி 80 கோடிக்கு மேல் உலக அளவில் வசூலை வாரி குவித்து இந்திய திரை உலகை மிரள வைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான தளபதி படத்திற்கு பிறகு, மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னின் செல்வன் படத்தின் மூலம் வசூல் சாதனை புரிந்திருக்கிறார்.

Also Read: பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பது சாபக்கேடு.. வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்

21 வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் சாதனைப் புரிந்து இருக்கும் மணிரத்னம் தற்போது சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார். உலக அளவில் தமிழகத்திலும் முதல்நாளில் மட்டும் 27 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களான அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட் படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

தொடர்ந்து இந்த படத்திற்கு எந்தவித நெகட்டிவ் கமெண்டுகளும் இல்லாமல், ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே குவிவதால் இரண்டாவது நாளான இன்று 150 கோடியை அசால்டாக தாண்டிவிடும்.

Also Read: மீண்டும் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குவாரா மணிரத்தினம்.. சுவாரஸ்யமான பதில்

ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் பல கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. அதுவே நல்ல லாபத்தை கொடுத்தது. அதுமட்டுமின்றி வரும் ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து அடுத்தடுத்து ஆயுத பூஜை உள்ளிட்ட விடுமுறை நாட்களும் வருவதால் பொன்னியின் செல்வன் முதல் வாரத்திலேயே 300 கோடியைகுவிக்கும் என்று திரை உலகில் பேசப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் வசூலும் ஏறுமுகமாகவே இருப்பதால் சில வாரங்களிலேயே அசால்டாக 1000 கோடியைத் தாண்டி, இதுவரை தமிழ் சினிமாவின் வசூல் சாதனை நிகழ்த்திய படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளப் போகிறது.

Also Read: வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Trending News