இயக்குனர் மணிரத்னம் தற்போது வரலாற்று கதையான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் இப்போது படத்தின் சில காட்சிகளை ரீ ஷூட் செய்யும் நிலைக்கு இயக்குனர் தள்ளப்பட்டிருக்கிறார். அதாவது படத்தில் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை பார்த்த ஏ ஆர் ரகுமான் அதை மாற்றி விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இப்போது ஏ ஆர் ரகுமான் படத்தை பிடிக்கவில்லை என்று சொன்னது ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் மீண்டும் அதை எப்படி படமாக்குவது என்ற யோசனையில் மணிரத்தினம் இருக்கிறார். ஆனால் அவரைவிட படத்தில் நடித்த நடிகர்கள் தான் பெரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.
ஏனென்றால் இந்த படத்திற்காக நடிகர்கள் அனைவரும் நீளமாக முடியை வளர்த்து நடித்தனர். தற்போது படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதால் அவர்கள் அடுத்த படத்திற்காக முடியை வெட்டி அவர்களுடைய லுக்கை முற்றிலுமாக மாற்றிவிட்டார்கள். இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு நடந்தால் என்ன செய்வது என்று அவர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
அவர்கள் மட்டுமல்லாமல் படத்தின் தயாரிப்பாளரும் குளிர் ஜுரம் வரும் அளவுக்கு நடுங்கி கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே படத்தின் பட்ஜெட்டை கைமீறி சென்று விட்டது. இதில் மீண்டும் படப்பிடிப்பை நடத்தினால் செலவுகளை சமாளிக்க முடியாது. அது மட்டுமல்லாமல் பட ரிலீஸ் தள்ளிப் போகும் நிலையும் இருக்கிறது.
அதன் மூலம் ஏற்படும் நஷ்டத்தையும் சமாளிக்க முடியாமல் போய்விடும் என்ற யோசனையில் தயாரிப்பாளர் இருக்கிறார். அதனால் படப்பிடிப்பை மீண்டும் நடத்த வேண்டாம் என்றும், குறித்த தேதியில் படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்ற முடிவிலும் தயாரிப்பாளர் இருப்பதாக கூறப்படுகிறது.