வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கட்டா குஸ்தி படத்தை தூக்கி நிறுத்திய பொன்னியின் செல்வன் பூங்குழலி.. விஷ்ணு விஷாலையே ஓரம் கட்டிய பிரபலங்கள்

செல்வா அய்யாவு இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் கட்டா குஸ்தி. இந்த படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படம் தெலுங்கில் மட்டி குஸ்தி என்ற பெயரில் வெளியாகி இருந்தது. மேலும் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. இந்நிலையில் விஷ்ணு விஷாலையே கட்டா குஸ்தி படத்தில் இரண்டு பிரபலங்கள் ஓரம் கட்டி உள்ளனர்.

Also Read : விஷ்ணு விஷாலை ஓரங்கட்டிய பூங்குழலி, சிரிப்பலையில் அதிரும் தியேட்டர்கள்.. கட்டா குஸ்தி முழு விமர்சனம்

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இந்தப் படத்திலேயே இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் கட்டா குஸ்தி படத்தை தூக்கி நிறுத்தி உள்ளார் ஐஸ்வர்யா. இந்த படத்திற்கு இவர் தான் வலு சேர்த்து உள்ளார்.

ஒருபடி மேலே சொல்லப் போனால் நடிப்பில் அடித்து நொறுக்கி உள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன்பின்பு இவர்களுக்குள் நடக்கும் கலாட்டா தான் கட்டா குஸ்தி.

Also Read : சிகரெட்டை ஊதித் தள்ளும் ஜகமே தந்திரம் பட ஐஸ்வர்யா லட்சுமி.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்

ஐஸ்வர்ய லட்சுமி ஒரு பக்கம் ரகளை செய்தால் அதற்கு மேல் ரணகளம் செய்துள்ளார் கருணாஸ். ரசிகர்கள் ரசிக்கும் படி இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து வெகு நாள் ஆகிறது. இந்த படத்தில் அவரை சரியாக தேர்ந்தெடுத்து படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர்.

கட்டா குஸ்தி படம் அனைத்து கிளாஸ் ரசிகர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்ததற்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்போதே படம் வெற்றி என்பது உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் படக்குழுவினர்கள் வாழ்த்துக்களை வருகிறார்கள்.

Also Read : தேவையா இந்த பொழப்பு.? வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட விஷ்ணு விஷால்

Trending News