இயக்குனர் மணிரத்தினத்தின் கனவுப் படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். கோலிவுட்டில் எத்தனையோ பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயற்சி செய்து முடியாமல் போனது. ஆனால் மணிரத்தினம் இப்போது அந்த நாவலை படமாக்கி விட்டார். இதனால் மணிரத்தினத்துக்கும் அவரின் பொன்னியின் செல்வன் படத்துக்கும் பெரிய அளவில் ஆதரவு கிடைத்து விட்டது.
மணிரத்தினம் இந்த படத்தை பான் இந்தியா மூவியாக ரிலீஸ் செய்தார். தமிழில் இந்த படம் முதல் நாள் புக்கிங்கிலேயே நான்கில் ஒரு பங்கை வசூல் செய்தது. பொன்னியின் செல்வன் வசூல் தமிழ், மலையாளத்தில் ஏறுமுகமாகவே இருந்தது. கன்னடம், தெலுங்கு, இந்தியில் மட்டும் காந்தார படத்தின் ரிலீசால் கொஞ்சம் சறுக்கியது. இருந்தாலும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் எதிர்பார்த்த காசை கொடுத்துவிட்டது.
Also Read: மணிரத்தினம் கிட்ட கத்துக்கோங்க ராஜமவுலி.. சொதப்பலை குத்தி காட்டும் ரசிகர்கள்
இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வேலைகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது. ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் தான் பாக்கி. இயக்குனர் மணிரத்தினம் முதலில் விடுமுறை நாளை குறிவைத்து ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் இப்போது இந்த தேதியில் மாற்றம் செய்திருக்கிறார்.
இதற்கு காரணம் அந்த மாதத்தில் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் திரையரங்குகள் செல்ல மாட்டார்கள். இதனால் முஸ்லீம் நாடுகளில் பொன்னியின் செல்வனை ரிலீஸ் செய்ய முடியாது. அப்படி ரிலீஸ் செய்தால் படத்தின் வணிகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 28 ஆக மாற்றப்பட்டு இருக்கிறது.
Also Read: மணிரத்னத்தை பார்த்து வியந்துபோன ராஜமவுலி.. எழுந்து நின்ற சம்பவத்தை கூறிய ஜெயம் ரவி
பொன்னியின் செல்வன் முழுப்படமும் லைகா புரொடக்சன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணை தயாரிப்பில் 570 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த படத்தின் வசூலுக்காக மணிரத்தினம் நேர்த்தியாக காய் நகர்த்துகிறார். எந்த இடத்திலும் பிரச்சனை ஏற்பட்டு படத்தின் வசூல் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார்.
ஏற்கனவே த்ரிஷா, ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஜெயராம் என பெரிய நட்சத்திரங்களை தேர்வு செய்து ரசிகர்களை தன் வசம் இழுத்து விட்டார். இதில் முதல் பாகத்தை பயங்கர டிவிஸ்டோடு முடித்திருக்கிறார். எனவே முதல் பாகத்தை பார்த்தவர்கள் கண்டிப்பாக இரண்டாம் பாகத்தை மிஸ் செய்ய மாட்டார்கள். இதனால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வசூலை வாரிக் குவித்துவிடும்.
Also Read: கார்த்தி, மணிரத்னத்துடன் உதவி இயக்குனராக வேலை செய்த 3 படங்கள்.. அசால்டாக சமாளிக்கும் வந்தயத்தேவன்