வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னியின் செல்வன் பார்த்து பாரதிராஜாவுக்கு வந்த ஆசை.. களத்தில் இறங்கிய சம்பவம்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களின் கொடி தான் ஓங்கி பறக்கிறது. லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், வினோத், பிரதீப் ரங்கநாதன் போன்ற இளம் இயக்குனர்கள் படம் தான் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த காலத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் தற்போது தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளனர். குறிப்பாக பாரதிராஜா கிராமத்தின் மனம் மாறாத கதையம்சம் கொண்ட படங்கள் ஏராளம் இயக்கி உள்ளார். அவை எல்லாம் காலத்தால் அழியாத படங்கள்.

Also Read : 16 வயதினிலே படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம்.. கடைசி வரை ஏமாற்றிய பாரதிராஜா

சில படங்களில் நடித்த பாரதிராஜா தற்போது உடல்நிலை குறைவு காரணமாக தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ளார். அதேபோல் சமீபத்தில் மணிரத்தினம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா நான் மட்டும் என் இப்படி அமைதியாக இருக்க வேண்டும். நாமும் இப்போது ஒரு புதிய படத்தை இயக்கலாம் என்று திட்டம் தீட்டு உள்ளார். அதற்கான வேலையை தொடங்கிய பாரதிராஜா மும்மரமாக செயல்படுத்த வருகிறாராம்.

Also Read : பிரியாமணியால் பாரதிராஜாவிற்கு ஏற்பட்ட சறுக்கல்.. மீண்டும் எந்திரிக்கவே முடியாமல் விழுந்த அடி

இதில் அவருக்கு உறுதுணையாக இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் பல இளம் இயக்குனர்கள் உள்ளனர். மேலும் இந்த படத்தில் இளையராஜா இசையமைப்பாளர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக அவரின் மகள் பவதாரணி இசையமைக்க உள்ளார்.

இந்த படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இவ்வளவு கிராமம் சார்ந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுதான் பாரதிராஜாவின் கடைசி படமாக இருக்கும் என அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த படத்திற்கு பிறகு பாரதிராஜா ஓய்வெடுக்க உள்ளாராம்.

Also Read : இதுவரை ஆனந்த விகடன் கொடுத்த அதிக மதிப்பெண்.. 42 வருடங்களாக உடைக்கப்படாத பாரதிராஜாவின் ரெக்கார்டு

Trending News