வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சர்வதேச அளவில் மிரட்ட வரும் பொன்னியின் செல்வன்.. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

500 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்தினம் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரியும் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் தொடங்கிய டிக்கெட் முன்பதிவும் எக்கச்சக்க லாபத்தை கொடுத்துள்ளது.

Also read : குந்தவை கொடுக்கும் ஓவர் அலப்பறை.. பொன்னியின் செல்வன் படத்தால் சம்பளத்தை உயர்த்திய திரிஷா

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பயங்கரமாக வியாபாரம் ஆகி உள்ளது. அந்த வகையில் டிக்கெட் வழங்கும் இணையதளமே ஸ்தம்பிக்கும் வகையில் இருந்திருக்கிறது இந்த பொன்னியின் செல்வனின் முன்பதிவு.

அது மட்டுமல்லாமல் முன்பதிவு ஆரம்பித்த முதல் நாளிலேயே கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாம். இது பட குழு உட்பட தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதுவே படத்திற்கான ஒரு சிறந்த ஓப்பனிங் ஆகவும் இருக்கிறது.

Also read : பொன்னியின் செல்வனுக்கு மணிரத்னம் போட்ட அதிரடி கண்டிஷன்.. அவர் படத்துக்கு மட்டும் இப்படி செய்வது நியாயமா?

இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 80 கோடி ரூபாயை தாண்டும் என்று கூறப்படுகிறது.

இதுவரை இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே முன்பதிவில் 25 கோடி ரூபாய் வசூலித்து முதல் இடத்தில் இருக்கிறது. அதைத் தாண்டி அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் வசூல் நிலவரம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது பொன்னியின் செல்வனின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பல திரைப்படங்களின் சாதனையையும் முறியடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Also read : பொன்னின் செல்வன் காட்டிய தீராத ஆசை.. 12 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்

Trending News