திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மொத்தத்தையும் சுருட்டி வாரிய மணிரத்தினம்

மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த மாதம் வெளியாகி தற்போது வரை திரையரங்கில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக்கொண்டிருப்பதுடன் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது.

எனவே முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்திற்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தை குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

Also Read: 10 நாட்களில் ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்.. 2ம் பாகத்தை கண்டு நடுங்கும் திரையுலகம்

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகத்தை வரும் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதைக்கேட்டதும் ரசிகர்களும் பயங்கர குஷியில் உள்ளனர். இரண்டாம் பாகத்திற்கான டப்பிங் வேலைகள் அனைத்தும் ஆல்ரெடி நிறைவடைந்துள்ளது.

ஏனென்றால் முதல் பாகம் எடுக்கும் போதே சைட் பை சைட் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பையும் மணிரத்னம் சாதுரியமாக எடுத்து முடித்து விட்டார். ஏனென்றால் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்தப் படத்தின் பட்ஜெட் எகிறி விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே திட்டமிட்ட இரண்டு பாகங்களையும் ஒரே சமயத்தில் எடுத்து படத்தின் பட்ஜெட்டை பாதியாகக் குறைத்து விட்டார்.

Also Read: திரும்பும் பக்கம் எல்லாம் கொட்டும் பணமழை.. பொன்னியின் செல்வனால் லைக்காவுக்கு கிடைத்த புதையல்

இதனால் இரண்டு பாகத்தையும் வெறும் 250 கோடியில் எடுத்து மிகப்பிரம்மாண்டமாக திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் பலே கில்லாடி மணிரத்னம். ஏற்கனவே பொன்னியின் செல்வன் முதல் பாகம் பத்து நாட்களில் 400 கோடியை தொட்ட நிலையில் இரண்டு பாகத்திற்கான செலவை ஏற்கனவே எடுத்துவிட்டு லாபம் பார்த்த நிலையில், இரண்டாம் பாகம் முழுவதும் மணிரத்தினத்திற்கு கிடைத்த லாபமாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் திரையுலகில் தனது கனவை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் ஒரே படத்தில் மொத்தத்தையும் வாரி சுருட்டிக் கொண்டார் என்று இந்திய திரையுலகமே மணிரத்னத்தின் புத்திசாலித்தனத்தை பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கிறது.

Also Read: விஜய் தவறவிட்ட சூப்பர் ஹிட் 5 படங்கள்.. பொன்னியின் செல்வன் படத்தில் இந்த கேரக்டரா?

Trending News