தமிழ் சினிமாவில் எழுத்தாளராக ‘புது நெல்லு புது’ நாத்து என்ற படத்தின் மூலம் பொன்வண்ணன் அறிமுகமானார். அதன்பிறகு இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்றைய கால நடிகர்கள் முதல் இன்றைய கால நடிகர்களான கார்த்தி, சூர்யா மற்றும் விமல் போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.
எட்டுப்பட்டி ராசா: நெப்போலியன், குஷ்பு மற்றும் ஊர்வசி ஆகியோர் ஆகியோர் நடிப்பில் வெளியான எட்டுபட்டிராசா எனும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் இப்படத்தில் இடம் பெற்ற ‘பஞ்சு முட்டாய் சீலை கட்டி’ எனும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி இன்றைய காலகட்டம் வரைக்கும் ரசிக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தான் பொன்வண்ணன் நடித்திருப்பார். இவரது நடிப்பும் அன்றைய காலகட்டத்தில் பெரிதாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பருத்திவீரன்: பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கார்த்திக். இப்படம் இவருக்கு பெரிய அளவு வெற்றியை தேடிக் கொடுத்தது. பிரியாமணிக்கு அப்பாவாக பொன்வண்ணன் நடித்திருப்பார், இப்படத்தின் வெற்றிக்கு கார்த்தி மற்றும் சரவணன் காரணமாக இருந்தார்களோ அதே போலத்தான் படத்தின் வெற்றிக்கும் பொன்வண்ணன் ஒரு முக்கியமான காரணமாக இருந்தார்.
இப்படத்தில் கார்த்தியை எதிர்த்துப் பேசும் காட்சிகள் அனைத்தும் பொன்வண்ணன் மிரட்டியிருப்பார். இப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது மட்டுமில்லாமல் பிரியாமணிக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது.
மாயாண்டி குடும்பத்தார்: தருன் கோபி, சிங்கம் புலி, ராஜ் கபூர், மணிவண்ணன் மற்றும் சீமான் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்து இருப்பார்கள். இப்படத்தில் பொன்வண்ணன் மணிவண்ணனுக்கு மகனாக நடித்திருப்பார். அண்ணன் தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் படமாக இந்த படத்தின் கதை அமைந்திருக்கும். அதில் பொன்வண்ணன் தன் தம்பிக்காக மனைவியை எதிர்த்து பேசும் காட்சிகள் மற்றும் தம்பிக்காக இவர் பண்ணும் தியாகங்கள் என படத்தின் காட்சிகள் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அயன்: கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் சூர்யாவுடன் அதிகமான காட்சிகள் நடித்திருந்தது பொன்வண்ணன் தான். ஏர்போர்ட்டில் சூர்யா திருடி வரும் அனைத்து காட்சிகளிலும் பொன்வண்ணன் காமெடி கலந்த நடிப்பால் அசத்தியிருப்பார். இப்படமும் இவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
பேராண்மை: ஜெயம்ரவியின் வாழ்க்கையிலேயே மிகவும் ஒரு முக்கிய படம் பேராண்மை. இப்படத்தில் அரசியல் பொருளாதாரம் என அனைத்தையும் எடுத்துக்காட்டி இருப்பார்கள். ஜெயம் ரவிக்கு உயர் அதிகாரியாக பொன்வண்ணன் நடித்திருப்பார். முதலில் ஜெயம் ரவிக்கு ஆதரவாக இருக்கும் பொன்வண்ணன் ஒரு கட்டத்திற்கு பிறகு ஜெயம் ரவியை எதிர்த்து நடித்திருப்பார். கடைசியாக ஜெயம் ரவி கஷ்டப்பட்டு காப்பாற்றிய இந்திய நாட்டை தான் காப்பாற்றுவதாக கூறி விருதும் வாங்குவார். இந்த காட்சிகள் மூலம் இவரது நடிப்பு படத்திற்கு ஒரு பக்க பலமாக அமைந்தது.
வாகை சூடவா: விமல் மற்றும் இனியா நடிப்பில் வெளியான வாகை சூட வா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. விமலின் வாழ்க்கையிலேயே முக்கிய படமாக உள்ளது. இப்படத்தில் பொன்வண்ணன் நடித்திருக்கும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏனென்றால் இதுவரைக்கும் எந்த ஒரு படத்திலும் நடித்து இருக்காத ஒரு வித்தியாசமான ஒரு நடிப்பினை இப்படத்தில் நடித்திருப்பார்.
மேற்கண்ட படங்களைத் தவிர பொன்வண்ணன் தலைவா, சதுரங்க வேட்டை,கடைக்குட்டி சிங்கம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் மற்றும் என் ஜி கே போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.