ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அடுத்த ஹிந்தி படத்திற்கு பூஜை போட்ட அட்லி.. பாலிவுட்டில் எடுத்த புது அவதாரம்

Pooja for Director Atlee’s next hindi film: ஷாருக்கான்- நயன்தாரா ஜோடி சேர்ந்த ஜவான் படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுத்து, பாலிவுட்டில் கடை விரித்த இயக்குனர் அட்லி, இப்போது அவருடைய அடுத்த ஹிந்தி படத்திற்கான பூஜை கோலாகலமாக நடந்துள்ளது. அந்த வீடியோ பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இந்த முறை இயக்குனராக இல்லாமல் தயாரிப்பாளராக விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தை தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்களை தயாரித்து ஓரளவு வரவேற்பை மட்டுமே பெற்றார்.

இப்போது ஹிந்தியில் தளபதியின் தெறி படத்தை ரீமேக் செய்கிறார். தமிழில் தெறி படத்தை இயக்கியது அட்லி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவான் மற்றும் கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி போன்றோர் நடிக்கின்றனர்.

Also Read: 22 வருடங்களாக விஜய்க்கு கிடைக்காத வாய்ப்பு.. சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்த அஜித்

அட்லியின் அடுத்த படத்திற்கான பூஜை

ஏற்கனவே இவர் பாலிவுட்டில் இயக்கிய ஜவான் படம் பேரரசு படத்தின் அட்ட காப்பி என்றும், ஒரு கைதியின் டைரி படத்தின் 23 காட்சிகளை அப்படியே காப்பி அடித்திருப்பதாகவும் ரசிகர்கள் அட்லியை வெளுத்து வாங்கினார்கள். என்னதான் ஜவான் படத்திற்கு நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்தாலும் ஆயிரம் கோடி வசூலை தட்டி தூக்கியது.

இந்த முறை இயக்குனராக மட்டுமல்லாமல் பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் அட்லி மிகுந்த நம்பிக்கையுடன் புது அவதாரம் எடுத்திருக்கிறார். தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் படத்திற்கான பூஜையில் அட்லியுடன் அவருடைய மனைவி பிரியாவும் கலந்து கொண்டார். இவர்களுடன் படத்தில் நடிக்கும் பிரபலங்களும் பங்கேற்றனர்.

தெறி இந்தி ரீமேக் பட பூஜை

theri-hindi-remake-pooja
theri-hindi-remake-pooja

Also Read: நெட்டிசன்களுக்கு சரியா தீனி போட்ட தளபதி.. வைரலாகும் புகைப்படம்

Trending News