வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ராசியில்லை என முத்திரை குத்தப்பட்ட பூஜா ஹெக்டே.. அசால்டாக அவரின் இடத்தை தட்டிப்பறித்த இளம் நாயகி

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா ஹெக்டே சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அந்த திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

அதேபோன்று ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்த ஆச்சார்யா திரைப்படம், பிரபாஸ் ஜோடியாக நடித்த ராதேஷ்யாம் திரைப்படம் போன்ற அனைத்தும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. இதனால் தற்போது பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு உள்ளார்.

அவரை தங்கள் படங்களில் புக் செய்வதற்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் நடிக்க வேண்டிய பல திரைப்படங்கள் தற்போது ஒரு இளம் கதாநாயகிக்கு கிடைத்துள்ளது.

டாக்டர், டான் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் பிரியங்கா அருள் மோகன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அவரின் கைவசம் தற்போது ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது.

அதில் பூஜா நடிக்க வேண்டிய பல திரைப்படங்களின் வாய்ப்பு பிரியா மோகனுக்கு கிடைத்துள்ளது. அதன் முதல் கட்டமாக மகேஷ்பாபு நடிக்கும் அவருடைய 28வது திரைப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் தான் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவை தான் படக்குழுவினர் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவரின் தொடர்ச்சியான தோல்வி திரைப்படங்களை பார்த்து தற்போது அவர்கள் பிரியங்கா மோகனை கமிட் செய்து விட்டார்களாம். இதனால் மீண்டும் தன்னுடைய இடத்தை தக்கவைக்க பூஜா ஹெக்டே பல திட்டங்களை போட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Trending News